வகுளாபரணம்
வகுளாபரணம் கருநாடக இசையின் 14வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 14வது மேளத்திற்கு வாடிவஸந்தபைரவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 க3 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க3 ரி1 ஸ |
சிறப்பு அம்சங்கள்
தொகு- மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து தாரஸ்தாயி மத்திமம் வரை சஞ்சாரம் செய்வது இந்த இராகத்திற்கு இனிமையைக் கொடுக்கும்.
- இந்த இராகத்தில் வரும் அந்தர காந்தாரமும், கைசிகி நிஷாதமும் இவ்விராகத்தின் இரஞ்சகத்தை வெளிப்படுத்தும்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் நாமநாராயணி (50) ஆகும்.
- இதன் ரி, ம, நி முறையே கிரக பேதத்தின் வழியாக கோசலம் (71), கீரவாணி (21), ஹேமவதி (58) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | கொனியாடி | கர்ப்பபுரிவாசர் | ஆதி |
கிருதி | ஏராமுனி | தியாகராஜர் | திரிபுடை |
கிருதி | நிலையான பேரின்பமே | அம்புஜம் கிருஷ்ணா | மிஸ்ர சாபு |
கிருதி | கெட்டுப்போகாத | முத்துத் தாண்டவர் | ஆதி |
கிருதி | நம்பினேன் ஐயா | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | கொனியாடி | கர்ப்பபுரிவாசர் | ஆதி |
கிருதி | ஏழைப் பங்காளா | வேதநாயகம் பிள்ளை | ஆதி |
கிருதி | ஜாலம் செய்வதேதோ | வேதநாயகம் பிள்ளை | ரூபகம் |
ஜன்ய இராகங்கள்
தொகுவகுளாபரணத்தின் ஜன்ய இராகங்கள் இவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.