லாண்டசட் என்பது வானில் இருந்து பூமி தொடர்பான விடயங்களைப் பெறும் நீண்டகாலச் செயற்கைக் கோள் திட்டம் ஆகும். முதலாவது லாண்ட்சட் 1972 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. சமீபத்திய லாண்ட்சட் ஏப்ரல் 15, 1999 இல் ஏவப்பட்டது. லாண்டசட் செய்மதியில் இருந்து மில்லியன் கணக்கான ஒளிப்படங்கள் (புகைப்படங்கள்) எடுக்கப்பட்டுள்ளது. இவ் ஒளிப்படங்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் லாண்ட்சட் பெறும் நிலையங்களூடாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

லாண்ட்சட் 7 ஆனது 8 spectral bands ஐக் கொண்டுள்ளது. இதன் துல்லியத்தன்மையானது (Spatial Resolution) 15 மீட்டர் முதல் 60 மீட்டர் வரை வேறுபடும்.

செய்மதியின் வரலாறு

தொகு
  • லாண்டசட் 1 - ஆரம்பதில் புவிவள தொழில்நுடபச் செய்மதி என்றே பெயரிடப்படது, 23 ஜூலை 1972 இல் ஏவப்பட்டு 6 ஜனவரி 1978 இல் முடிவுக்கு வந்தது.
  • லாண்ட்சட் 2 - 22 ஜனவரி 1975 இல் ஏவப்பட்டு 22 ஜனவரி 1981 இல் முடிவுக்கு வந்தது.
  • லாண்ட்சட் 3 - மார்ச் 5 1978 இல் ஏவப்பட்டு மார்ச் 31 1983 இல் முடிவுக்கு வந்தது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாண்ட்சட்&oldid=1372320" இலிருந்து மீள்விக்கப்பட்டது