லாலா அன்சுராஜ் குப்தா

இந்திய அரசியல்வாதி

லாலா அன்சுராஜ் குப்தா (Lala Hansraj Gupta ) இவர் ஓர் இந்தியவைச் சேர்ந்த கல்வியாளரும், சமூக சேவகரும் மற்றும் தொண்டுள்ளம் படைத்தவரும் ஆவார். சமுதாயத்திற்காக இவர் ஆற்றிய சேவைகளுக்காக இந்திய அரசு இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கியது.

இவர் தில்லியின் ஏழாவது நகரத் தந்தையாக பணியாற்றினார். [1] மறைந்த எல்.என் பிர்லாவுடன் லாலா அன்ஸ்ராஜ் குப்தா; கே. கே. பிர்லா மற்றும் சரத் ராம் ஆகியோர் தில்லியின் வெளிச்சங்கள் ஆவர். இவர்கள் 1944 இல் நிறுவப்பட்டகுழந்தைகள் கல்விச் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்கள் ஆவர். கல்வியின் வெளிச்சத்தை பரப்புவதற்கான உன்னத காரணத்திற்காக இவர்கள் கைகோர்த்தனர். பால பாரதி பொதுப் பள்ளி என்பது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகள் கல்விச் சங்கத்துக்கு சொந்தமான தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.

இவர் 1985 சூலை 3 அன்று இறந்தார். இவருக்கு அங்கிரா தேவி என்ற மனைவுயும் தேஸ்ராஜ் குப்தா, சிவராஜ் குப்தா, ராஜேந்திர குப்தா மற்றும் மகேந்திர குப்தா என்கிற நான்கு மகன்களும்; மற்றும் சசி மற்றும் பிரதிபா என்ற இரு மகள்களும் இருந்தனர்.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலா_அன்சுராஜ்_குப்தா&oldid=3227391" இலிருந்து மீள்விக்கப்பட்டது