லால்-பால்-பால்

இந்திய விடுதலைப் போராட்டம்

இலால் பால் பால் (Lal Bal Pal) இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகிய மூவரையும் மக்கள் இலால், பால், பால் எனச்சிறப்பாகப் பெயரிட்டு அழைத்தனர்.[1] 20 ஆம் நுாற்றாண்டின் முற்பகுதியில் 1905 முதல் 1918 வரை, பிரித்தானிய ஆட்சியின்கீழ் இருந்த இந்தியாவில், முற்போக்கு தேசியவாதிகளில் முப்பெரும் குழுவாக இருந்தவா்கள் ஆவா். அவர்கள் 1905-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வங்கப் பிரிவினையை எதிர்த்து கிளர்ச்சி செய்து சுதேசி இயக்கத்தைத் தொடங்கினா். அனைத்துப் பிரித்தானிய இறக்குமதிப் பொருள்களையும் புறக்கணிப்பது என்றும், இந்தியப் பொருள்களை மட்டுமே பயன்படுத்துவது என்றும் மக்களிடையே பரப்புரை செய்தனா்.

இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால்

சுதேசி இயக்கத்தின் வாயிலாக அகில இந்திய அளவில் புரட்சி வெடித்தது. புரட்சி வார்த்தையாக அப்போது விளங்கியது "தன்னம்பிக்கை" அல்லது "தன்னிறைவு" என்பதாகும்.

வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடெங்கிலும் இந்தியர்கள் திரண்டு வந்தனர். வங்காளத்தில் தொடங்கிய பிரித்தானியப் பொருட்களின் புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், ஆரசுகு எதிராக மற்ற பகுதிகளுக்கும் புரட்சி போல் பரவியது. தேசியவாத இயக்கத்தின் முக்கியத் தலைவரான பால கங்காதர் திலகரின் கைது, பிபின் சந்திர பால், அரவிந்தர் ஆகியோரை தீவிர அரசியலில் ஈடுபடச் செய்தது.

1905 இல் வங்காளத்தில் நடந்த பிரிவினைக்கு எதிரான போராட்டத்தின் போது 1907 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் புறக்கணிப்பது என்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதனென்றும் முழங்கிய சுதேசி இயக்கத்தை அவர்கள் ஆதரித்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் சில இந்திய அறிவுஜீவிகள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான உணர்வு தோன்றியது. இந்த நிலை 1905 ஆம் ஆண்டில் சுதேசி இயக்கத்துடன் தேசிய அகில இந்தியக் கட்சியிலும் வெடித்தது. தேசியவாத இயக்கம், படிப்படியாக அதன் முக்கிய தலைவர்களான பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டதாலும், லாலா லஜபதி ராயைப் பிரித்தானிய காவல் துறையினர் அடித்துத் துன்புறுத்தியதால் ஏற்பட்ட உடற்காயங்களால் அவதிப்பட்டு, 1928 நவம்பர் 17 அன்று காலமானார். இதனால் பிபின் சந்திர பால், அரவிந்தர் ஆகியோர் முனைப்பான அரசியலில் இருந்து ஓய்வு பெற்றனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்-பால்-பால்&oldid=3878699" இலிருந்து மீள்விக்கப்பட்டது