லாவண்யா நல்லி

லாவண்யா நல்லி, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிக நிர்வாகியும், தொழிலதிபருமாவார். தற்போது இவரது குடும்ப வணிக நிறுவனமான நல்லி குழும நிறுவனங்களின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இந்த குழுமம், பெண்கள் புடவைகள் மற்றும் உடைகளைத் தயாரித்து சில்லறை விற்பனை செய்யும் வர்த்தக கடைகளை நிர்வகித்து வருகிறது. நிபுணத்துவம் பெற்றது.. [2] [3]

லாவண்யா நல்லி
பிறப்பு10 சூன் 1978 (1978-06-10) (அகவை 46)[1]
பெற்றோர்நல்லி ராமநாதன்
வாழ்க்கைத்
துணை
அபய் கோதாரி
உறவினர்கள்நல்லி குப்புசாமி (தாத்தா)

கல்வி

தொகு

லாவண்யா, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார் [4] மேலும்  ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் 2011 ஆம் ஆண்டில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டமும் பெற்றுள்ளார்.

தொழில்

தொகு

அண்ணா பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, ​​அதன் ஒரு பகுதியாக, நல்லி நிறுவனத்தின் விநியோகத்துறையில் மூன்று மாத காலமாக, பயிற்சி பெற்றுள்ளார். மேலும் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.  தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு 2009 ஆம் ஆண்டு வரையிலும் நல்லி நிறுவனத்தில் யில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்,


2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை படிக்கச் சென்ற லாவண்யா, அங்கு அபய் கோதாரியை சந்தித்து காதலித்து, 2011 ஆம் ஆண்டில் அவரைத் திருமணம் செய்துகொண்டு தம்பதியராக சிகாகோவிற்கு குடிபெயர்ந்துள்ளார். இவரது கணவரான,கோதாரி பூஸ் ஹாமில்டன் நிறுவனத்திலும் லாவண்யா, மெக்கின்சி நிறுவனத்திலும் பணியில் சேர்ந்து வேலை செய்துள்ளனர். அந்நிறுவனத்தில் சேர்ந்து தலைசிறந்த ஐநூறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு உயர்மட்ட வளர்ச்சி மற்றும் லாபத்தை மேம்படுத்தும் முயற்சிகள், மாற்ற மேலாண்மை திட்டங்கள் மற்றும் பல வணிக உத்திகள் போன்றவற்றில் ஆலோசனை வழங்கும் குழுவில் பணிபுரிந்துள்ளார். அங்கு 2013 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். [5]

2014 ஆம் ஆண்டில், லாவண்யா தனது குடும்பத்தினருடன், இந்தியாவுக்குத் திரும்பி, இந்தியாவின் முன்னணி இணையதள ஆடை விற்பனை நிறுவனமான,மிந்த்ராவில் சேர்ந்து, வருவாய் மற்றும் விற்பனை பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். அவரது கணவர், சொந்தத் தொழில் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். [6]

குறிப்புகள்

தொகு
  1. "லாவண்யா நல்லி". irec.asia. பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
  2. "Buy latest collection of Sarees Online at Nalli.com". www.nalli.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  3. "Lavanya Nalli | When the pie grows bigger, you don't need to worry who gets a bigger slice - Livemint". www.livemint.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  4. Pandya-Wagh, Kinjal (2016-08-29). "The Indian woman transforming her family's sari firm" (in en-GB). BBC News. https://www.bbc.com/news/business-36886693. 
  5. "Lavanya Nalli Wants Family Silks Business To Be No.1 Global Sari Destination". Forbes.
  6. "How Lavanya Nalli gave a modern twist to Nalli's nine-decade legacy – Outlook Business WoW" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவண்யா_நல்லி&oldid=3817216" இலிருந்து மீள்விக்கப்பட்டது