லாவலோங் வனவிலங்கு காப்பகம்

லாவலோங் வனவிலங்கு காப்பகம் (Lawalong Wildlife Sanctuary) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள சத்ரா மாவட்டத்தின் சத்ரா துணைப்பிரிவில் உள்ள லாவலோங் சிடி தொகுதியில் அமைந்துள்ளது.

லாவலோங் வனவிலங்கு காப்பகம்
Map showing the location of லாவலோங் வனவிலங்கு காப்பகம்
Map showing the location of லாவலோங் வனவிலங்கு காப்பகம்
சார்க்கண்டில் லாவலோங் வனவிலங்கு காப்பகம் அமைவிடம்
Map showing the location of லாவலோங் வனவிலங்கு காப்பகம்
Map showing the location of லாவலோங் வனவிலங்கு காப்பகம்
லாவலோங் வனவிலங்கு காப்பகம் (இந்தியா)
அமைவிடம்சத்ரா மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா
ஆள்கூறுகள்24°09′38″N 84°39′27″E / 24.160652°N 84.657478°E / 24.160652; 84.657478
பரப்பளவு207 சதுர கிலோமீட்டர்கள் (80 sq mi)
நிறுவப்பட்டது1978 (officially notified as a wildlife sanctuary)

வரலாறு

தொகு

லாவலோங் வனவிலங்கு காப்பகம் முன்பு இராம்கர் ராஜா மற்றும் அப்பகுதியில் உள்ள பிற நில உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1924இல் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 1947இல் இது ஒரு தனியார் பாதுகாக்கப்பட்ட காடாக மாறியது. 1953இல் பீகார் அரசிடம் இந்த உரிமை ஒப்படைக்கப்பட்டது. முந்தைய நாட்களில், இந்தக் காடுகளில் அதிக எண்ணிக்கையிலான வனவிலங்குகள் இருந்ததால் நாடு முழுவதிலுமிருந்து வேட்டைக்காரர்கள் ஈர்க்கப்பட்டனர். இந்தப் பகுதியின் உரிமையாளர்களில் ஒருவரான குண்டா தோட்டத்தில் அவ்வப்போது "சிகர்" எனும் வேட்டை நிகழ்ச்சியினைப் பெரிய அளவில் ஏற்பாடு செய்து வந்தார். இதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் வேட்டையாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டது. காப்பகப் பகுதியில் 64 கிராமங்கள் உள்ளன. மேலும் இந்தக் கிராமங்களின் மக்களுக்குச் சில உரிமைகள் மற்றும் சலுகைகள் கொடுக்கப்பட்டன. கால்நடைகளை மேய்த்தல், விறகு சேகரித்தல் இந்த உரிமைகளில் அடங்கும்.[1]

புவியியல்

தொகு

இடம்

தொகு

லாவலோங் வனவிலங்கு காப்பகம் 24°09′38′′N 84°39′27′′E/24.160652 °N 84.657478 °E எனும் ஆள்கூற்றில் அமைந்துள்ளது. இது 207 சதுர கிலோமீட்டர் (80 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது.[2] இந்தக் காப்பகத்தின் தெற்கில் அமானத் ஆற்றாலும், மேற்கில் சாக்கோ ஆற்றாலும் வடகிழக்கில் லிலாஜன் ஆற்றாலும் சூழப்பட்டுள்ளது.[1]

சத்ராவிற்கு சுமார் 35 கி. மீ. தொலைவில் லாவலோங் வனவிலங்கு காப்பகம் உள்ளது. கயா-ராஞ்சி மாநில நெடுஞ்சாலை லாவலோங் சரணாலயத்திற்குக் கிழக்குப் பகுதி அருகில் செல்கிறது. கயா-ராஞ்சி மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் ஒரு சாலை உள்ளது. இது லாவலோங் கிராம் வழியாகச் சரணாலயப் பகுதி வழியாகச் செல்கிறது. அசாரிபாக்-சிமாரியா-பாக்ரா மோர் பி. டபிள்யூ. டி. சாலை லாவலோங்கிற்குச் செல்கிறது, இங்கு லாவலோங் வனவிலங்கு சரணாலயத்தின் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. லாவலோங் மற்றும் குந்தாவுக்கான பேருந்துகள் இந்தச் சாலைகளில் வழியே இயங்குகின்றன. இவை லுதிடி, பாக்ரா மோர் போன்ற முக்கிய இடங்களில் நிறுத்தப்படுகின்றன.[2]

குறிப்பு: மேலுள்ள வரைபடம் மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிடத்தக்க இடங்களைக் காண்பிக்கின்றது. வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களும் பெரிய முழு திரை வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

காடுகள்

தொகு

காப்பகத்தில் உள்ள காடுகள் வடக்கு வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக்காடுகள் இயற்கையில் பல்வேறு வகைகளைச் சேர்ந்தவை. விதானம் நல்ல உயரம் மற்றும் விட்டம் கொண்ட மரங்களுடன் மிதமான அளவில் நெருக்கமாக உள்ளது. சரணாலயம் முழுவதும் 'சால்' மரம் காணப்படுகிறது.[1]

வனவிலங்குகள்

தொகு

காப்பகத்தில் உள்ள முக்கிய பாலூட்டி இனங்கள் செம்முக மந்தி, பொதுவான மந்தி, இந்திய யானை, கடமான், சிறுத்தை, புள்ளி மான், கேளையாடு, தேன் கரடி, காட்டுப் பூனை, பொதுவான கீரி, செந்நாய் முதலியன்.[1]

பறவைகள்: பொதுவான கோழி, காடை, இருவாய்ச்சி, பிணந்தின்னிக் கழுகு.[1]

தங்கல்

தொகு

லாவலோங்கில் ஒரு வன ஓய்வு இல்லம் உள்ளது. இது வன நிர்வாகிகள்/ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Management Plan of Lawalong Wildlife Sanctuary" (PDF). The protected Area – the Existing Situation. Archived from the original (PDF) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  2. 2.0 2.1 "Jharkhand National Parks and Wildlife Sanctuaries". Jagran Josh. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.