லாவெண்டிரி பெரியா
லாவெண்டிரி பெரியா (Lavrenty Pavlovich Beria), (பிறப்பு:1899-மறைவு:1953) சோவியத் ஒன்றியத்தின் வெற்றி வீரர் எனும் மிக உயர்ந்த விருதை பெற்றவர். ஜோசப் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவரான பெரியாவின் பட்டப்பெயர்கள் ஜோசப் ஸ்டாலினின் ஹிம்லர் மற்றும் நமது நமது ஹிம்லர் ஆகும். ஜார்ஜியாவின் பொதுவுடமைக் கட்சியின் செயலாராக பணியாற்றிய லாவெண்டிரி பெரியா, ஜோசப் ஸ்டாலினின் நம்பிக்கை உரியவராகியதால் லாவெண்டிரி பெரியா சோவியத் ஒன்றியத்தின் உள்துறை அமைச்சராக 25 நவம்பர் 1938 முதல் 29 டிசம்பர் 1945 முடிய பணியாற்றினார். பின்னர் சோவியத் ஒன்றியத்தின் முதல் துணை பிரதம அமைச்சர் 5 மார்ச் 1953 முதல் 26 சூன் 1953 வரை பணியாற்றினார். [2]
லாவெண்டிரி பெரியா | |
---|---|
Лаврентий Берия | |
1939ல் லாவெண்டிரி பெரியா | |
சோவியத் ஒன்றியத்தின் முதல் துணை பிரதம அமைச்சர் | |
பதவியில் 5 மார்ச் 1953 – 26 சூன் 1953 | |
பிரதமர் | ஜார்ஜி மெலன்கோவ் |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 5 மார்ச் 1953 – 26 சூன் 1953 | |
பதவியில் 25 நவம்பர் 1938 – 29 டிசம்பர் 1945 | |
பொதுச் செயலாளர், ஜார்ஜியா பொதுவுடமைக் கட்சி | |
பதவியில் 15 சனவரி 1934 – 31 ஆகஸ்டு 1938 | |
பதவியில் 14 நவம்பர் 1931 – 18 அக்டோபர் 1932 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லாவெண்டிரி பாவ்லோவிச் பெரியா 29 மார்ச்சு 1899 குல்ரிபிஷ் மாவட்டம், உருசியப் பேரரசு, தற்கால , ஜார்ஜியா |
இறப்பு | 23 திசம்பர் 1953 மாஸ்கோ, உருசியா குடியரசு சோசலிச சோவியத் கூட்டமைப்பு, (தற்கால (உருசியா) | (அகவை 54)
தேசியம் | சோவியத் ஒன்றியம், ஜார்ஜியா |
அரசியல் கட்சி | சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1917-1953) |
துணைவர் | நினா ஜெக்கேச்கோரி |
விருதுகள் | சோவியத் ஒன்றியத்தின் வெற்றி வீரர் |
கையெழுத்து | |
புனைப்பெயர்(s) | ஜோசப் ஸ்டாலினின் ஹிம்லர் நமது ஹிம்லர்[1] |
Military service | |
தரம் | மார்ஷல், சோவியத் ஒன்றியம் |
போர்கள்/யுத்தங்கள் | உருசியப் புரட்சி, 1917, போலாந்து-சோவியத் போர் (1918-1921), இரண்டாம் உலகப் போர் (1939-1945), கொரியப் போர் (1950-1953) |
துவக்கத்தில் விளாதிமிர் லெனின் தலைமையிலான போல்செவிக் கட்சியின் ஜார்ஜியா பகுதியின் முக்கியத் தலைவராக லாவென்டிரி பெரியா பணியாற்றினார். ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ஒன்றியத்தின் உள்துறை அமைச்சகத்தில் இரகசிய உளவாளியாக 1938 முதல் 1945 முடிய பணியாற்றினார். மேலும் இரகசிய உளவு அமைப்பான NKVDயின் இயக்குநராக 1946 முதல் 1953 முடிய பணியாற்றினார். 1953ல் நிக்கித்தா குருசேவ் ஆட்சியின் போது லாவெண்டிரி பெரியா, மர்ம நபர்களால் 23 டிசம்பர் 1953 அன்று மாஸ்கோவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.[3][4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Montefiore, Simon Sebag (2005). Stalin: Court of the Red Tsar. Random House. p. 483.
- ↑ Lavrenty Beria
- ↑ Wittlin, Thaddeus 1972. Commissar: the life and death of Lavrenty Pavlovich Beria. New York: Macmillan. OCLC 462215687.
- ↑ Yakovlev A.N. Naumov V. and Sigachev Y. 1999. (eds) Lavrenty Beria, 1953. Stenographic Report of July's Plenary Meeting of the Central Committee of the Communist Party of the Soviet Union and other documents, International Democracy Foundation, Moscow, 1999 (in Russian). ISBN 5-89511-006-1
- ↑ Beria, Sergo 2003. Beria, My Father: Inside Stalin's Kremlin. London: Duckworth. ISBN 0715632051
- ↑ Knight, Amy 1996. Beria: Stalin's First Lieutenant. Princeton University Press. ISBN 0-691-03257-2
வெளி இணைப்புகள்
தொகு- Beria, Lavrentiy (1936), The Victory of the National Policy of Lenin and Stalin, Marxists.
- ——— (1950), The Great Contrast, Marxists.
- Annotated bibliography for Lavrentiy Beria from the Alsos Digital Library for Nuclear Issues
- Central Intelligence Agency, Office of Current Intelligence. The Reversal of the Doctors' Plot and Its Immediate Aftermath, 17 July 1953.
- Central Intelligence Agency, Office of Current Intelligence. Purge of L.P. Beria, 17 April 1954.
- Central Intelligence Agency, Office of Current Intelligence. Summarization of Reports Preceding Beria Purge, 17 August 1954.
- Lavrenty Beria performed by Bob Hoskins and other Russian historical celebrities played by foreign stars