லிங்கம்பதி ஏரி

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் உள்ள ஏரி

லிங்கம்பதி ஏரி (Lingambudhi Lake) என்பதுகர்நாடகத்தின், மைசூரில் அமைந்துள்ள ஒரு ஏரி ஆகும்.[1]

லிங்கம்பதி ஏரி
அமைவிடம்மைசூர்
ஆள்கூறுகள்12°16′9.74″N 76°36′43.12″E / 12.2693722°N 76.6119778°E / 12.2693722; 76.6119778
வடிநில நாடுகள்இந்தியா
லிங்கம்பதி ஏரி
லிங்கம்புதியிலுள்ள கோயில்
உருக்கதீஸ்வரர் கோயில்
சிதாப்ஜி கோயில், லிங்கம்புதி பாளையம்

மைசூரில் என்றும் வற்றாத, நகருக்கு நீராதாரமாக குக்கரஹள்ளி, கரஞ்சி, லிங்கம்பதி ஏரி என மூன்று ஏரிகளுள்ளன. இம்மூன்று ஏரிகளில் லிங்கம்பதி ஏரி அதன் அமைவிடத்தாலும் நகரை வாழ்விப்பதாலும் தலையாயதாக விளங்குகிறது. லிங்கம்பதி ஏரி காவேரி ஆற்றின் வடிநிலப்பகுதியில் அமைந்துள்ள வற்றாத ஏரியாகும். இது 1828-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதிலிருந்து 1980 கள் வரை வற்றாமல் இருந்து வருகிறது. இது மைசூர்நகரை ஒட்டி அமைந்துள்ள ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஏரி ஸ்ரீராம்புரா என்ற குடியிருப்புக்கு மிக அருகில் உள்ளது. இந்த லிங்கம்பதி ஏரி தற்போது லிங்கம்பதி பாளையத்தில் வசிக்கும் மக்களுக்கு மதம்சார்ந்த வழிபாட்டிடமாகவும், குடிநீர் ஆதாரமாகவும், பாசனத்திற்கான ஆதாரமாகவும், மீன் வளர்ப்பு நிலையமாகவும், மக்கள் துவைக்க, குளிக்க பயன்படும் நீராதாரமாக விளங்குகிறது. 28 ஆகஸ்டு 2003-ல் மைசூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து வந்த குறிப்பின்ப்டி லிங்கம்பதி ஏரியும் அதன் சுற்றுப்பகுதியும் மாநில வனத்துறையின் 2001- ஆண்டின் அறிவிப்பு மேற்கோளின்படி வனத்துறைக்கு உட்பட்ட பகுதியாக மாறி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்துவருகிறது. இது லிங்கம்பதி ஏரியைப் பற்றி குறிப்பிடும்படியான செய்தியாகும். இதனால் தான் இந்த ஏரி தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக விளங்குகிறது.(மஞ்சுநாத் சதாசிவ்,2007)

அமைவிடம்

தொகு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லிங்கம்புதி ஏரி மைசூருக்கு புற எல்லையாக இருந்தது, ஆனால் இப்போது இந்த ஏரியையும் தாண்டி குடியிருப்புக்கள் வளர்ந்துள்ளது. புவியியல் விவரப்படி இந்த ஏரி மைசூருக்கு தென்மேற்கே 12' 20" வ மற்றும் 76' 31" கி கடல் மட்டத்திலிருந்து 730 மீ உயரத்தில் அமைந்துள்ளது. மைசூரின் மையப்பகுதியிலிருந்து 7 கி.மீ துரத்தில் உள்ளது.

வரலாற்று சான்றுபடி இந்தலிங்கம்புதி ஏரி 1828 ம் ஆண்டு மைசூரை ஆண்ட மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரின் மனைவி லிங்கஜம்மானி மைசூரின் பெண் தெய்வமான ஸ்ரீ சாமுண்டீஸ்வரிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக மைசூரிக்கு புறத்தே மஹாலிங்கேஸ்வரர் கோயிலை கட்டி இந்த ஏரியையும் ஏற்படுத்தினார். இது 45 கி.மீ சுற்றளவுக்கு நீர்பிடிப்பு பகுதியை கொண்டிருந்தது. 1988 மக்கள் தொகை கணக்கின் படி இந்த ஏரி நகரைவிட்டு நன்கு வெளியே இருந்தது. ஆனல் 2011 கணக்கெடுப்பின்படி இது அனைத்து புறங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்து. ஏரியை சுற்றி இருந்த இருபதுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் தற்போது ஒழிக்கப்பட்டது. 1997-98ல் மரங்களற்று காணப்பட்ட ஏரி வனத்துறையின் சீரிய முயற்சியால் மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக, மக்களுக்கு விறகுக்கு பயன்படும் விதமாக 217 ஏக்கரில் தற்போது லிங்கம்புதி பறவைகள் சரணாலயமாக 2001 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு புங்கமரம், கருவேலம், மா, நாவல், இலந்தை ஆகிய மரங்கள் இங்கே ஏராளமாக உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. R. Krishna Kumar. "Over 400 pelicans arrive at Lingambudhi". Online Edition of The Hindu, dated 2002-04-05. Archived from the original on 2002-12-22. பார்க்கப்பட்ட நாள் 2007-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்கம்பதி_ஏரி&oldid=3570216" இலிருந்து மீள்விக்கப்பட்டது