பாசிச்சாயம்

(லிட்மஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாசிச்சாயம் (litmus) என்பது நீரில் கரையக் கூடிய பல சாயங்களின் கலவையாகும். இது கற்பாசியில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் கார/அமிலத்தன்மையை ஓர்வுசெய்ய பயன்படும் பழங்கால முறையைப் பின்பற்ற வடிகட்டித்தாளில் உறிஞ்சப்படுகிறது. அமிலத்தன்மையில் நீலப் பாசிச்சாயத்தாள் சிவப்பாக மாறும். காரத் தன்மையில், சிவப்பு பாசிச்சாயத்தாள் நீல நிறமாகும். கார காடித்தன்மைச் சுட்டெண் நெடுக்கம் 4.5 முதல் 8.3 வரையில் 25 செ வெப்பநிலையில் இந்த நிறமாற்றம் ஏற்படும். நடுநிலையான பாசிச்சாயத்தாளின் நிறம் ஊதா ஆகும். இது பொருட்களின் அமிலத்தன்மையை ஓர்வுசெய்ய பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பாசிச்சாயத்தை நீரில் கலந்தும் பயன்படுத்தலாம். அமிலம் இருப்பின் அந்தக் கலவை சிவப்பாகவும், காரமாயின் நீலமாகவும் இருக்கும்.

பாசிச்சாயத் தூள்
வேதிக் கட்டமைப்பு

இந்த பாசிச்சாயக் கலவை சிஏஎசு எண் 1393-92-6 ஐக் கொண்டிருப்பதுடன் 10 இலிருந்து 15 வரையான சாயங்களையும் கொண்டுள்ளது.

பாசிச்சாயம் (pH சுட்டி)
4.5 இலும் குறைவான pH 8.3 இலும் அதிகமான pH
4.5 8.3

வரலாறு

தொகு

பாசிச்சாயம் கி.பி 1300 அளவில் முதன் முறையாக எசுப்பானிய இரசவாதி அர்னால்டசு டி வில்லா நோவா அவர்களால் பயன்படுத்தப்பட்டது.[1] பதினாறாம் நூற்றாண்டில் இருந்து நீலச்சாயம் கற்பாசியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு நெதர்லாந்தில் பயன்படுத்தப்பட்டது.

இயற்கை வளங்கள்

தொகு
 
பார்மிலியா சல்கட்டா

பார்மிலியா சல்கட்டா பாசிச்சாயத்தூள்கள் பல்வேறு வகையான கற்பாசி வகைகளில் காணப்படுகின்றன. அவை ரோசெல்லா டிங்டோரியாயா (தென் அமெரிக்கா), ரோசெல்லா பியூசிபார்மிசு (அங்கோலா மற்றும் மடகாஸ்கர்), ரோசெல்லா பிகிமேயா (அல்ஜீரியா), ரோசெல்லோ பைக்கோபிசிசு, இலெகோனாரா டாட்ர்ட்டாரியா (நார்வே, சுவீடன்), வேரியோலாரியா டீல்பேட்டா, ஓக்ரோலீச்சியா பேரல்லா, பர்மோட்ரேம்மா டிங்டோரம், பார்மெலியா என்பன ஆகும். தற்போது, முக்கிய வளங்களாக ரோசெல்லா மான்டெகினை (மொசாம்பிக்), டெண்டிரோகிராபா இலியூக்கோபோயியே (கலிபோர்னியா) ஆகியன அமைகின்றன.

பயன்கள்

தொகு
 
பயபடுத்திய பாசிச்சாயத்தாள்

இது அமிலத்தைக் கண்டறிவதில் அடிப்படைத் தீர்வாக அமைகிறது . அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையை மாற்றும் நீர்க்கரைசல் வளிமங்களுக்கு ஓர்வுசெய்ய ஈரப் பாசிச்சாயத்தாள் பயன்படுத்தப்படலாம்; வளிமம் தண்ணீரில் கரைந்து, அதன் விளைவாக தாள் நிறம் மாறுகிறது. எடுத்துகாட்டாக, அம்மோனியா வளிமம், காரமாகையால் சிவப்புத் தாள் நீல நிறமாக மாறுகிறது.நீலத் தாள் அமிலத்தில் சிவப்பு நிறமாகவும் சிவப்புத் தாள் காரத்தில் நீல நிறமாகவும் மாறுகிறது, பி.எச் 4.5-8.3 என்ற நெடுக்கத்திலும் 25 செ (77 °F) வெப்பநிலையிலும் நிற மாற்றம் ஏற்படுகிறது. நடுநிலையில் இத்தாள் ஊதா நிறத்தில் காணப்படுகின்றது . .[1] பாசிச்சாயத்தூள் ஒரு நீர்க்கரைசலாகவும் பயன்படுகின்றது. அப்பொழுது அமில நிலையில் சிவப்பாகவும் ,மற்றும் கார நிலையில் நீலமாகவும் மாறுகிறது.

அமில, காரந் தவிர, வேறு சில வேதியியல் எதிர்விளைவுகளும் பாசிச்சாயத்தாளின் வண்ணத்தை மாற்ரும். எடுத்துகாட்டாக, குளோரின் வளிமம் நீலத் தாளைச் சலவை செய்து வெண்மையாக மாற்றும். [2] ஐப்போக் குளோரைட் இயணிகள் தாம் இச்சலவைச் செய்லை நிகழ்த்துகிறது. இந்நிலையில் இது குறிகாட்டியாகச் செயல்படுவதில்லை.[3]

வேதியியல்

தொகு

பாசிச்சாயத் தூள்கலவையின் CAS எண் 1393-92-6 ஆகும். இதில் 10 முதல் 15 வெவ்வேறு சாயங்கள் உள்ளன. இதன் பெரும்பாலான வேதிக் கூறுகள், ஓர்சைன் என்று அழைக்கப்படும் வேதிக்கலவையுடன் ஒத்துள்ளன. ஆனால் அந்த வேதிக் கலவை பாசிச்சாயத்தூளில் வெவ்வேறு விகிதத்தில் இருக்கும். மாராக, ஓர்சைனை ஒப்பிடும்போது, பாசித்தூள் கலவையின் முதன்மை உட்ற்றின் சராசரி மூலக்கூற்று எடை 3300 ஆகும்.[4]7- ஐதராக்சிபீனக்சசோன் எனும் வண்ணநிறமி பாசிச்சாயத்தூளுக்குத் தன் இயல்புகளைத் தந்து அதன் அமிலக் காரச் சுட்டியல்பை உருவாக்குகிறது.[5]> பாசிச்சாயத்தூளின் சில பிரித்தெடுப்புகள் எரித்ரோலிமின் (அல்லது எரித்ரோலின்), அசோலிட்மின், இசுப்பானியோலிட்மின், இலியூகோரோசின், இலியூகோசோலிட்மின், ஏசோலிட்டினம் போல, பல சிறப்பு பெயர்களில் வழங்குகின்றன. என்றாலும், அனைத்து வகைகளும் கிட்டத்தட்ட பாசிச்சாயத்தூள் போன்ற விளைவையே தருகின்றன [6]

இயங்குமுறை

தொகு

சிவப்புப் பாசிச்சாயத்தாளில் மெலிந்த இருமுன்மி அமிலம் உள்ளது. இது காரச் சேர்மத்துக்கு ஆட்படும்போது, நீரக இயனிகள் (ions) காரத்தோடு எதிர்வினை புரிகின்றன. பாசிச்சாய உருவாக்கும் மாற்றுக்காரக் கரைசல் நீலநிறத்தில் இருப்பதால், அதில் ஈரச் சிவப்புத் தாள் நீலமாகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Neupert, Manfred (January 31, 2013). "Lackmus". Römpp Lexikon Chemie.  
  2. O'Leary, Donal (2000). "Chlorine". The Chemical Elements. Archived from the original on 2008-12-21.
  3. UCC - Chlorine
  4. Beecken, H.; E-M. Gottschalk; U. v Gizycki; H. Krämer; D. Maassen; H-G. Matthies; H. Musso; C. Rathjen et al. (2003). "Orcein and Litmus". Biotechnic & Histochemistry 78 (6): 289–302. doi:10.1080/10520290410001671362. பப்மெட்:15473576. 
  5. H. Musso, C. Rathjen (1959). "Orcein dyes. X. Light absorption and chromophore of litmus". Chem. Ber. 92 (3): 751–3. doi:10.1002/cber.19590920331. 
  6. E.T. Wolf: Vollständige Übersicht der Elementar-analytischen Untersuchungen organischer Substanzen, S.450-453, veröffentlicht 1846, Verlag E. Anton (Germany)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிச்சாயம்&oldid=3742985" இலிருந்து மீள்விக்கப்பட்டது