லிம்பர் வனவிலங்கு காப்பகம்
லிம்பர் வனவிலங்கு காப்பகம் (Limber Wildlife Sanctuary) அல்லது காசிங் வனவிலங்கு காப்பகம் என்பது சம்மு-காசுமீரில் உள்ள ஒரு வனவிலங்கு காப்பகம் ஆகும். இங்கு அரிய மார்க்கோர் காட்டு ஆடுகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் மாநிலத்தின் நான்காவது தேசியப் பூங்கா இதுவாகும்.[1] சம்மு-காசுமீர் அரசால் அறிவிக்கப்பட்டபடி இது சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.[2]
லிம்பர் வனவிலங்கு காப்பகம் | |
---|---|
காசிங் காட்டுயிர் காப்பகம் | |
அமைவிடம் | பாரமுல்லா மாவட்டம், சம்மு காசுமீர், இந்தியா |
அருகாமை நகரம் | சிறிநகர் |
பரப்பளவு | 26 km2 (10 sq mi) |
அமைவிடம்
தொகுலிம்பர் வனவிலங்கு காப்பகம் சுனார் 26.00 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[3] இது சம்மு-காசுமீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ஜீலமின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. இது பாக்கித்தானுடன் இந்தியா வைத்திருக்கும் பன்னாட்டு அதிகார வரம்பான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது. இது சிறிநகரிலிருந்து சுமார் 70 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[4]
வனவிலங்குகள்
தொகுலிம்பர் வனவிலங்கு காப்பகம் மார்க்கோர் காட்டு ஆடுகளுக்கான பாதுகாப்பு களமாகும். மற்ற வகை ஆடுகளைத் தவிர, லிம்பர் வனவிலங்கு சரணாலயத்தில் இமயமலை கத்தூரி மான், சிறுத்தை மற்றும் பழுப்பு கரடிகள் உள்ளன. சுமார் 120 வகையான பறவைகளும் 20 வகையான பாலூட்டிகளும் இங்குக் காணப்படுகின்றன.[4][5]
புவிசார் சுற்றுச்சூழல் சேதம்
தொகு2005 அக்டோபர் 8 அன்று ஏற்பட்ட பூகம்பத்தின் போது தொலைதூரப் பகுதியில் உள்ள லிம்பர் வனவிலங்கு சரணாலயத்தில் புவி-சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டது. சம்மு-காசுமீர் அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 30,000 மற்றும் புனரமைப்பு நோக்கங்களுக்காக ரூ 1 லட்சம் வழங்கியது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://documents1.worldbank.org/curated/zh/670671579168013399/pdf/Biodiversity-Management-Plan-BMP-Integrated-Project-for-Source-Sustainability-and-climate-Resilient-Rain-fed-Agriculture-in-Himachal-Pradesh-P165129.pdf
- ↑ http://jkwildlife.com/wild/wild/orders/Public%20Notiication%20regarding%20ESZ%20Kazinag%20NP%20Limber%20WLS%20&%20Gulmarg%20WLS.pdf
- ↑ "BirdLife Data Zone". datazone.birdlife.org. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
- ↑ 4.0 4.1 "J&K ENVIS | Official Website of J&K ENVIS Centre - Environment Related Information of Jammu and Kashmir". jkenvis.org. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
- ↑ "Limber (Kazinag or Qazinag) Wildlife Sanctuary". WildTrails | The One-Stop Destination for all your Wildlife Holidays (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
- ↑ "J&K notifies Tatakuti WLS for the endangered markhor". WTI (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
- ↑ "Relief materials distributed in Limber WLS". WTI (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.