லியாட்டே துறைமுகச் சண்டை

லியாட்டே துறைமுகச் சண்டை (Battle of Port Lyautey) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு கடற்படைச் சண்டை. டார்ச் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் அமெரிக்கப் படைகள் மொரோக்கோ நாட்டின் லியாட்டே துறைமுக நகரத்தைக் (தற்கால கெனிட்ரா) கைப்பற்றின.

லியாட்டே துறைமுகச் சண்டை
டார்ச் நடவடிக்கை பகுதி
நாள் நவம்பர் 8, 1942
இடம் லியாட்டே துறைமுகம், மொரோக்கோ
அமெரிக்க வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா பிரான்சு விஷி பிரான்சு
 ஜெர்மனி

நவம்பர் 1943ல் நேச நாடுகள் கடல்வழியாக நாசி ஆதரவு விஷி பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஆப்பிரிக்க பிரெஞ்சு காலனிகள் மீது படையெடுத்தன. டார்ச் நடவடிக்கை என்று அழைக்கப்பட்ட இது மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. அதன் மேற்கு இலக்குப் படைப்பிரிவின் (western task force) ஒரு இலக்காக லியாட்டே துறைமுக நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் கைப்பற்றுவது நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 8, 1943ல் அமெரிக்கப் படைகள் லியாட்டே அருகே தரையிறங்கி அதனைத் தாக்கின. மூன்று நாட்கள் நடந்த தொடர் சண்டையில் லியாட்டே நகரமும் அதன் அரண்நிலைகளும் அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்டன.