லியுட்மிலா யெஃபிமென்கோ

உக்ரைன் நடிகைகள்

லியுட்மைலா பைலிபிவ்னா யெஃபிமென்கோ ( Lyudmyla Pylypivna Yefymenkoஉக்ரைனியன்: Людмила Пилипівна Єфименко; பிறப்பு 25 செப்டம்பர் 1951 ) என்பவர் ஒரு உக்ரைனியத் திரைப்பட நடிகையும் திரைப்பட இயக்குநரும் ஆவார். லியுட்மிலா யெஃபிமென்கோ உக்ரைனின் தகுதி வாய்ந்த கலைஞர், உக்ரைன் மக்கள் கலைஞர், மற்றும் இளவரசி ஓல்காவின் ஆணை உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.

லியுட்மிலா யெஃபிமென்கோ
பிறப்புலியுட்மைலா பைலிபிவ்னா யெஃபிமென்கோ
25 செப்டம்பர் 1951 (1951-09-25) (அகவை 72)
சோவியத் ஒன்றியம், உக்ரைன் சோவியத் சோசலிசக் குடியரசு கீவ்
பணி
  • நடிகை
  • திரைப்பட இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
யூரி இலியென்கோ (இற. 2010)
பிள்ளைகள்2

துவக்ககால வாழ்க்கை தொகு

லியுட்மிலா யெஃபிமென்கோ சோவியத் ஒன்றியத்தின், உக்ரைன் சோவியத் சோசலிச குடியரசின் கீவ் நகரில் 1951 செப்டம்பர் 25 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் பைலிப் மற்றும் ஹன்னா யெஃபிமென்கோ ஆகியோராவர். இவரது பெற்றோர் இவருக்கு லியுட்மைலா பைலிபிவ்னா யெஃபிமென்கோ என்ற பெயரை இட்டனர். இவர் 1972 ஆம் ஆண்டு ஜெராசிமோவ் ஓளிப்பதிவு கல்விக் கூடத்தில் நடிப்புத் துறையில் பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

லியுட்மிலா யெஃபிமென்கோ தன் பட்டப் படிப்பிற்குப் பிறகு 1972 முதல், யெஃபிமென்கோ கியேவில் உள்ள டோவ்சென்கோ பிலிம் ஸ்டுடியோவில் பணிபுரிந்து வருகிறார். இவர் பரேண்டம் அட்ரஸ் திரைப்படத்தின் வழியாக திரைப்பட நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் தி லெஜண்ட் ஆஃப் பிரின்சஸ் ஓல்கா படத்தில் முக்கிய பாத்திரத்திலும் மற்றும் பிரேயர் ஃபார் ஹெட்மேன் மஸெபா படத்தில் வாசில் கொச்சுபேயின் மனைவி பாத்திரம் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்துள்ளார்.

லியுட்மிலா யெஃபிமென்கோ உக்ரேனிய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

லியுட்மிலா யெஃபிமென்கோ சக திரைப்பட இயக்குநரான யூரி இலியென்கோ என்பவரை மணந்தார்.[1] இந்த இணையருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.[2] இந்த இணையரின் மகன்களான ஆண்ட்ரி இலியென்கோ ( பிறப்பு 1987 ) மற்றும் பைலிப் இலியென்கோ ( பிறப்பு 30 செப்டம்பர் 1977 ) திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியாக உள்ளனர்.[3] 2012 உக்ரேனிய நாடாளுமன்றத் தேர்தலின் போது, "ஸ்வோபோடா"வின் தேர்தல் பட்டியலில் பிலிப் 122வது இடத்தில் இருந்தார், மேலும் ஆண்ட்ரி அதே கட்சியின் வேட்பாளராக தொகுதி எண். 215 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஆண்ட்ரி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் பிலிப் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[3][4][5] இவரது கணவரான யூரி இலியென்கோ புற்று நோயால் பாதிக்கபட்டார். அந்த நோயின் காரணமாக 2010 ஆம் ஆண்டு அவர் தன் 73 ஆம் வயதில் இறந்தார்.

விருதுகளும் கௌரவங்களும் தொகு

லியுட்மிலா யெஃபிமென்கோவுக்கு முறையே 1998 மற்றும் 2008 இல் உக்ரைனின் மரியாதைக்குரிய கலைஞர் மற்றும் உக்ரைனின் மக்கள் கலைஞர் என்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.[6][7] 11 செப்டம்பர் 2021 அன்று, லியுட்மிலா யெஃபிமென்கோவுக்கு 3 ஆம் நிலையிலான இளவரசி ஓல்காவின் ஆணை விருது வழங்கப்பட்டது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Illienko Brothers". Welcome to Ukraine. 2000.
  2. "Biography Yuriy Illienko". Korrespondent.net (in ரஷியன்).
  3. 3.0 3.1 "Biography Andriy Illienko". Golos.ua (in உக்ரைனியன்). 4 April 2013.
  4. "Election list of "Svoboda" 2012 election" (in உக்ரைனியன்). Central Election Commission of Ukraine.
  5. "Party of Regions gets 185 seats in Ukrainian parliament, Batkivschyna 101 - CEC". Interfax-Ukraine. 12 November 2012. Archived from the original on 31 October 2013.
  6. "Нагороджена Указом Президента України від 11 вересня 1998 року No. 1014". Archived from the original on 2018-09-13. பார்க்கப்பட்ட நாள் 2015-04-01.
  7. "Указ Президента України No. 821/2008 від 10 вересня 2008 року «Про відзначення державними нагородами України діячів кіномистецтва»". Archived from the original on 2014-12-19.
  8. Decree of the President of Ukraine from 11 вересня 2021 year № 465/2021 «Про відзначення державними нагородами України» (in உக்குரேனிய மொழி)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியுட்மிலா_யெஃபிமென்கோ&oldid=3912364" இலிருந்து மீள்விக்கப்பட்டது