லு சாஃவ்சி
(லியு சாவோக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லு சஃவ்சி (Liu Shaoqi, 24 நவம்பர் 1898 – 12 நவம்பர் 1969) சீனப் புரட்சிவாதி, அரசியல்வாதி, கோட்பாட்டாளர். இவர் சீனா அரசின் தலைவராக 1959 இருந்து 1968 வரை இருந்தார். இக் காலத்தில் சீன பொருளாதார மீள்கட்டமைப்புக்கான பல திட்டங்களைச் செயற்படுத்தினார். இவர் மாவோவின் அதிகாரத்திற்குச் சவாலாக அமைந்துவிடுவார் என்று மாவோ கருதினார். இதனால் 1960 களின் இறுதியில் இவர் மாவோவிற்கு வேண்டத்தகாதவர் ஆனார். இவரை வலது சாரி எனறு குற்றம்சாட்டி, மாவோ பண்பாட்டு புரட்சியின் சாட்டாக, துரோகி என்றும், முதலாளித்துவ கையாள் என்றும் குற்றம்சாட்டி பொது வாழ்வில் இருந்து காணாமல் போகச் செய்தார். இவர் கடுமையாக நடத்தப்பட்டு, 1969 ஆம் ஆண்டு இறந்தார். இவரை 1978 ஆம் ஆண்டு சீனாவுக்குத் தலைவராக வந்த டங் சியாவுபிங் கவுரவித்தார்.
லு சாஃவ்சி 刘少奇 | |
---|---|
பிறப்பு | 24 நவம்பர் 1898 |
இறப்பு | 12 நவம்பர் 1969 (அகவை 70) கைஃபெங் |
பணி | அரசியல்வாதி |