லியோக்ரேட்ஸ்
லியோக்ரேட்ஸ் (Leocrates, பண்டைக் கிரேக்கம்: Λεωκράτης, ஸ்ட்ரோபஸின் மகன் ( பண்டைக் கிரேக்கம்: Στροίβος ), என்பவர் முதல் பெலோபொன்னேசியப் போரின் முன்னணி ஏதெனியன் ஜெனரல் ஆவார். பாரம்பரியமாக ஏதென்சின் கடற்படைக்கு போட்டியாளராக இருந்த ஏஜினா தீவைக் கைப்பற்றிய ஏதெனியன் படைகளுக்கு இவர் தலைமை தாங்கினார்.
கிமு 458 இல், லியோக்ரேட்ஸ் ஒரு பெரிய ஏதெனியன் கடற்படைக்கு தலைமை தாங்கினார். அப்படைகள் ஏஜினாவுக்கு அருகிலுள்ள சரோனிக் வளைகுடாவில் ஏஜினியன் கடற்படையையுடன் மோதியது. அப்போரில் ஏஜினாவின் எழுபது கப்பல்கள் கைப்பற்றியோ அல்லது மூழ்கடித்ததாகவோ கூறப்படும் ஒரு பெரிய கடல் போராக இருந்தது. கடற்படையை முறியடித்த பிறகு, லியோக்ரேட்ஸ் ஏஜினாவை முற்றுகையிட ஏதெனியப் படைகளை தீவில் தரையிறக்கினார். இறுதியில் ஏஜினியர்கள் ஏதெனியர்களிடம் சரணடைந்தனர். மேலும் ஏதென்சுக்கு கட்டுப்பட்ட கூட்டாளிகளாக ஆயினர். [1]
கிமு 5 ஆம் நூற்றாண்டின் ஏதெனியன் குத்துச்சண்டை வீரரான ஸ்ட்ரோபசின் மகன் லியோக்ரேட்ஸ் என்பவரே லியோக்ரேட்ஸ் என அடையாளம் காணப்படுகிறார். இவருக்காக சிமோனைட்ஸ் ஒரு பாடலை எழுதினார். [2] கிமு 479 இல் பிளாட்டியா போரில் அரிசுடடைடீசு மற்றும் மைரனைட்ஸ் ஆகியோருடன் ஜெனரலாக இருந்த லியோக்ரேட்சுதான் இவர் என்றும் சிலரால் அடையாளம் காணப்படுகிறார். [3]