முதல் பெலோபொன்னேசியன் போர்

கிரேக்கப் போர்

முதல் பெலோபொன்னேசியன் போர் (First Peloponnesian War, கிமு 460-445) என்பது எசுபார்த்தாவின் தலைமையிலான பெலோபொன்னேசியன் கூட்டணி மற்றும் தீப்ஸ் மற்றும் ஆர்கோசின் ஆதரவுடனான ஏதென்ஸ் தலைமையிலான டெலியன் கூட்டணி ஆகியவற்றிற்கு இடையே நடந்த போராகும். இந்தப் போரானது, இரண்டாம் புனிதப் போர் போன்ற தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் சிறு போர்களைக் கொண்டிருந்தது. ஏதெனியர்கள் தங்கள் நகரத்தை நீண்ட சுவர்களைக் கட்டி பலப்படுத்துதல், பெலோபொன்னேசியன் கூட்டணியில் இருந்து மெகாரா விலகி ஏதென்சின் அணியில் இணைதல் மற்றும் ஏதெனியன் பேரரசின் வளர்ச்சியில் எசுபார்த்தாவுக்கு ஏற்பட்ட பொறாமை, கவலை உள்ளிட்ட பல விசயங்களே போருக்கு காரணமாக இருந்தன.

முதல் பெலோபொன்னேசியன் போர்
நாள் 460–கிமு 445
இடம் கிரேக்க முதன்மை நிலம்
எசுபார்த்தா மற்றும் ஏதென்சுக்கு இடையே "முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தம்" உருவானது.
நிலப்பகுதி
மாற்றங்கள்
மெகாரா பெலோபொன்னேசியன் கூட்டணிக்குத் திரும்பியது, திரோசென் மற்றும் அக்கீயா சுதந்திரமடைந்தன, ஏஜினா ஏதென்சுக்கு கப்பம் செலுத்த வேண்டும், ஆனால் தன்னாட்சி கொண்டிருக்கும். மற்றும் சர்ச்சைகள் நடுவர் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
பிரிவினர்
ஏதென்சு தலைமையிலான டெலியன் கூட்டணி,
ஆர்கோஸ்
எசுபார்த்தா தலைமையிலான பெலோபொன்னேசியன் கூட்டணி,
தீப்ஸ்
தளபதிகள், தலைவர்கள்
பெரிக்கிள்ஸ்
சிமோன்
லியோக்ரேட்ஸ்
தால்மிடிஸ்
மைரனைட்ஸ்
Carnius
பிளீஸ்ட்டோனாக்ஸ்
நிகோமெடிசு

முதல் பெலோபொன்னேசியன் போரானது கிமு 460 இல் ஓனோ போரில் இருந்து தொடங்கியது. அதில் எசுபார்த்தன் படைகள் ஏதெனியன்-ஆர்கிவ் கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டன. [1] [2] [3] [4] முதலில் ஏதெனியர்கள் சண்டையில் சிறப்பான வெற்றியை ஈட்டினர். அவர்களின் சிறந்த கடற்படையைப் பயன்படுத்தி வென்றனர். கிமு 457 வரை எசுபார்தன்களும் அவர்களது கூட்டாளிகளும் தனக்ராவில் ஏதெனிய இராணுவத்தை தோற்கடிக்கும் வரை அவர்கள் நிலத்தில் சண்டையிடுவதில் சிறந்து விளங்கினர். எவ்வாறாயினும், ஏதெனியர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தி, போயோட்டியன்களுக்கு எதிராக ஓனோஃபிட்டா போரில் சிறப்பான வெற்றியைப் பெற்றனர், மேலும் இந்த வெற்றியைத் தொடர்ந்து தீப்சைத் தவிர முழு போயோட்டியாவையும் ஏதென்சு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

ஏஜினாவை டெலியன் கூட்டணியின் உறுப்பினராக்குவதன் மூலமும் பெலோபொன்னீசை சூறையாடுவதன் மூலமும் ஏதென்ஸ் மேலும் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டது. ஏதெனியர்கள் கிமு 454 இல் எகிப்தில் பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இது அவர்கள் எசுபார்த்தாவுடன் ஐந்து ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வழிவகுத்தது. இருப்பினும், கிமு 448 இல் இரண்டாம் புனிதப் போரின் தொடக்கத்திலிருந்து போர் மீண்டும் வெடித்தது. கிமு 446 இல், போயோடியா கிளர்ச்சி செய்து கொரோனியாவில் ஏதெனியர்களை தோற்கடித்து அவர்களின் சுதந்திரத்தை மீட்டெடுத்தது.

முதல் பெலோபொன்னேசியப் போர் எசுபார்த்தாவிற்கும் ஏதென்சுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தினால் முடிவடைந்தது. இது முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தம் (கிமு 446-445 குளிர்காலம்) என அழைக்கப்பட்டது. இந்த அமைதி உடன்படிக்கையின் விதிகளின்படி, இரு தரப்பினரும் தங்கள் பேரரசுகளின் முக்கிய பகுதிகளை தக்கவைத்துக் கொண்டனர். எசுபார்த்தா தரையில் ஆதிக்கம் செலுத்தியபோது ஏதென்ஸ் கடலில் அதன் ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. மெகாரா பெலோபொன்னேசியன் கூட்டணிக்குத் திரும்பியது. ஏஜினா திரை செலுத்தியது ஆனால் டெலியன் கூட்டணியில் தன்னாட்சி உறுப்பினரானாக இருந்தது. இரண்டு கூட்டணிகளுக்கு இடையேயான போர் கிமு 431 இல் மீண்டும் தொடங்கியது, அது இரண்டாம் பெலோபொன்னேசியப் போருக்கு வழிவகுத்தது. அது உறுதியான எசுபார்த்தன் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது, அதன் தொடர்ச்சியாக, கிமு 404 இல், ஏதென்சு எசுபார்த்தாவால் ஆக்கிரமிக்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. Pausanias, & Frazer, J. G. (1898). Pausanias's Description of Greece. London: Macmillan. p. 138
  2. E. D. Francis and Michael Vickers, Oenoe Painting in the Stoa Poikile, and Herodotus' Account of Marathon. The Annual of the British School at Athens Vol. 80, (1985), pp. 99–113
  3. In 460 BC, Argos rises against Sparta. Athens supports Argos and Thessaly. The small force that is sent by Sparta to quell the uprising in Argos is defeated by a joint Athenian and Argos force at Oenoe.
  4. Thucydides, & in Jowett, B. (1900). Thucydides. Oxford: Clarendon Press. pp. 107–09