தீப்ஸ், கிரேக்கம்
தீப்ஸ் (Thebes, கிரேக்கம்: Θήβα , திவா [ˈθiva] ; பண்டைக் கிரேக்கம்: Θῆβαι , தேபாய் ) என்பது நடு கிரேக்கத்தின் போயோடியாவில் உள்ள ஒரு நகரம். இது காட்மஸ், ஓடிபஸ், டயோனிசசு, ஹெராக்கிள்ஸ் மற்றும் பிறர் சம்பந்தபட்ட கதைகளின் இடமாக கிரேக்கத் தொன்மவியலில் முக்கிய இடம் வகித்துள்ளது. தீப்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த தொல்லியல் அகழ்வாய்வுகளில் மைசீனியன் குடியேற்றம் மற்றும் லீனியர் பி எழுத்துகளில் எழுதப்பட்ட களிமண் பலகைகள் கிடைத்தன. இது இத்தலம் வெண்கலக் காலத்தில் பெற்றிருந்த முக்கியத்துவத்தை இது குறிக்கிறது.
தீப்ஸ் Θήβα | |
---|---|
பண்டைய தீப்சின் மையக் கோட்டையான காட்மியாவின் எச்சங்கள் | |
அமைவிடம் | |
Location within the region | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | நடு கிரேக்கம் |
மண்டல அலகு: | போயோட்டியா |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நகராட்சி | |
- மக்கள்தொகை: | 36,477 |
- பரப்பளவு: | 830.112 km2 (321 sq mi) |
- அடர்த்தி: | 44 /km2 (114 /sq mi) |
நிர்வாக அலகு | |
- மக்கள்தொகை: | 25,845 |
- பரப்பளவு: | 321.015 km2 (124 sq mi) |
- அடர்த்தி: | 81 /km2 (209 /sq mi) |
சமூகம் | |
- மக்கள்தொகை: | 22,883 |
- பரப்பளவு: | 143.889 km2 (56 sq mi) |
- அடர்த்தி: | 159 /km2 (412 /sq mi) |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம் (மத்தியில்): | 215 m (705 ft) |
அஞ்சல் குறியீடு: | 32200 |
தொலைபேசி: | 22620 |
வலைத்தளம் | |
www |
பண்டைய பிராந்தியமான போயோட்டியாவின் மிகப்பெரிய நகரமாக தீப்ஸ் இருந்தது. இது போயோடியன் கூட்டமைப்புக்குத் தலைமை வகித்தது. மேலும் இது பண்டைய ஏதென்சின் முக்கிய போட்டியாளராக இருந்தது. குறிப்பாக இது கிமு 480 இல் செர்கசின் தலைமையில் நடந்த கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் படையெடுப்பின் போது பாரசீகர்களுக்கு பக்கபலமாக இருந்தது. எபமினோண்டாசின் தலைமையிலான தீப்ஸ் படைகள் 371 கி.மு. இல் லியூக்ட்ரா போரில் எசுபார்த்தன் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தன. மாசிடோனியா அதிகாரத்தில் உயர்ந்த போது, கிமு 338 இல் செரோனியா சமரில் தீப்ஸ் மற்றும் ஏதென்சு கூட்டணிமீது இரண்டாம் பிலிப் தீர்க்கமான வெற்றியைப் பெற்றார். கிமு 335 இல் பேரரசர் அலெக்சாந்தரால் அழிக்கப்படுவதற்கு முன்புவரை கிரேக்க வரலாற்றில் தீப்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலாக இருந்தது. மேலும் கிரேக்கத்தை மாசிடோனியா வெற்றி கொண்ட காலக்கட்டத்தில் தீப்ஸ் மிகவும் மேலாதிக்கம் செலுத்தும் நகர அரசாக இருந்தது. பைசாந்தியன் காலத்தில், இந்த நகரம் அதன் பட்டாடைகளுக்கு பிரபலமானதாக இருந்தது.
நவீன நகரத்தில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில், காட்மியாவின் எச்சங்கள் (வெண்கல காலம் மற்றும் நகரத்துக்கு அண்மையிலுள்ள கோட்டை) மற்றும் சிதறியுள்ள பழங்கால எச்சங்கள் உள்ளன. நவீன தீப்ஸ் என்பது போயோட்டியாவின் பிராந்திய அலகின் மிகப்பெரிய நகரமாகும்.
நிலவியல்
தொகுதீப்ஸ் ஒரு சமவெளியில், வடக்கே இல்கி ஏரி (பண்டைய எலிகா ), தெற்கே அட்டிகாவிலிருந்து போயோட்டியாவைப் பிரிக்கும் சித்தாரோன் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 215 மீ (705 அடு) உயரத்தில் உள்ளது. இது ஏதென்சுக்கு வடமேற்கே 50 கிமீ (31 மைல்) தொலைவிலும், லாமியாவிற்கு தென்கிழக்கே 100 கிமீ (62 மைல்) தொலைவிலும் உள்ளது. மோட்டர்வே 1 மற்றும் ஏதென்ஸ்-தெசலோனிகி இரயில்வே தீப்சை ஏதென்ஸ் மற்றும் வடக்கு கிரேக்கத்துடன் இணைக்கிறது. தீப்ஸ் நகராட்சி 830.112 கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. தீப்ஸ் நகராட்சி அலகு 321.015 கிமீ பரப்பளவிலும், தீப்ஸ் கம்யூனிட்டி சமூகம் 143.889 கிமீ பரப்பளவ்வைக் கொண்டுள்ளது.[2]
நகராட்சி
தொகு2011 இல், கல்லிக்ராடிஸ் சீர்திருத்தத்தின் விளைவாக, தீப்ஸ் பிளாட்டீஸ், திஸ்வி, வாகியா ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு பெரிய நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்த புதிய நகராட்சி தீப்ஸ் என்ற பெயரையே தக்க வைத்துக் கொண்டது. மற்ற மூன்று நகராட்சிகளும் புதிய பெரிய நகராட்சியின் அலகுகளாக மாறின.[3]
குறிப்புகள்
தொகு- ↑ Detailed census results 2011 (கிரேக்கம்)
- ↑ "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece.
- ↑ "ΦΕΚ A 87/2010, Kallikratis reform law text". Government Gazette.