ஆர்கோஸ், பெலோபொன்னீஸ்
அர்கோஸ் (Argos, (/ˈɑːrɡɒs, -ɡəs/; Greek: Άργος வார்ப்புரு:IPA-el; Ancient Greek: Ἄργος வார்ப்புரு:IPA-el) என்பது கிரேக்கத்தின், பெலோபொன்னீசின், ஆர்கோலிசில் உள்ள ஒரு நகரமாகும். இது உலகில் தொடர்ச்சியாக மக்கள் வசிக்கும் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். மேலும் இது ஐரோப்பாவின் பழமையான நகரமாகும்.[2] இது ஆர்கோலிசில் உள்ள மிகப்பெரிய நகரம் மற்றும் இப்பகுதியின் முக்கிய மையமாகும்.
ஆர்கோஸ் | |
---|---|
Location within the regional unit | |
ஆள்கூறுகள்: 37°37′N 22°43′E / 37.617°N 22.717°E | |
மக்கள்தொகை (2011[1]) | 22,085 |
இடக் குறியீடு | 2751 |
இணையதளம் | newargos.gr |
2011 உள்ளூர் அரசாங்க சீர்திருத்தத்திற்குப் பிறகு இது ஆர்கோஸ்-மைக்கின்ஸ் நகராட்சியின் ஒரு பகுதியாக ஆனது. இது நகராட்சியின் ஒரு அலகு ஆகும்.[3] நகராட்சியின் இந்த அலகு 138.138 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.[4] இது அதன் வரலாற்று துறைமுகமாக இருந்த நாஃப்லியனில் இருந்து 11 கிலோமீட்டர்கள் (7 மைல்கள்) தொலைவில் உள்ளது. மிகப் பழமையான ஒரு குடியேற்றமான ஆர்கோஸ் கடந்த 7,000 ஆண்டுகளாக குறைந்தபட்சம் ஒரு கிராமமாகவாவது தொடர்ச்சியாக மக்கள் வசிப்பிடமாக இருந்து வருகிறது.[2] :121-
ஆர்கோஸ் நகரத்தில் வசிப்பவர் ஆர்கிவ் (/ˈɑːrɡaɪv/ AR-ghyve, /-dʒaɪv/ --jyve; கிரேக்கம்: Ἀργεῖος) என அழைக்கப்படுகின்றனர். இருப்பினும், டிரோஜன் போரின் போது டிராய் நகரைத் தாக்கிய பண்டைய கிரேக்கர்களைக் குறிக்கவும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது; இந்தச் சொல் ஓமரிக் பார்ட்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இன்றும் நகரத்தில் எண்ணற்ற பழங்கால நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. உள்ளூர் பொருளாதாரத்தின் முதன்மையான அம்சமாக வேளாண்மை உள்ளது.
நிலவியல்
தொகுகாலநிலை
தொகுஆர்கோஸ் வெப்பமான மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்டுள்ளது. இது கோடையில் கிரேக்கத்தின் வெப்பமான இடங்களில் ஒன்றாகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், Pyrgella (1980 - 2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 14.6 (58.3) |
14.7 (58.5) |
17.4 (63.3) |
21.3 (70.3) |
26.5 (79.7) |
31.4 (88.5) |
34.0 (93.2) |
33.7 (92.7) |
29.7 (85.5) |
24.7 (76.5) |
19.2 (66.6) |
15.5 (59.9) |
23.56 (74.41) |
தினசரி சராசரி °C (°F) | 8.2 (46.8) |
8.4 (47.1) |
10.9 (51.6) |
14.9 (58.8) |
20.3 (68.5) |
25.1 (77.2) |
27.5 (81.5) |
26.8 (80.2) |
22.6 (72.7) |
18.0 (64.4) |
13.0 (55.4) |
9.6 (49.3) |
17.11 (62.8) |
தாழ் சராசரி °C (°F) | 3.0 (37.4) |
2.9 (37.2) |
4.3 (39.7) |
6.7 (44.1) |
10.5 (50.9) |
14.0 (57.2) |
16.7 (62.1) |
16.8 (62.2) |
14.2 (57.6) |
11.5 (52.7) |
7.7 (45.9) |
4.8 (40.6) |
9.43 (48.97) |
பொழிவு mm (inches) | 66.5 (2.618) |
52.5 (2.067) |
52.2 (2.055) |
33.7 (1.327) |
18.7 (0.736) |
8.9 (0.35) |
9.1 (0.358) |
13.0 (0.512) |
20.3 (0.799) |
44.3 (1.744) |
82.5 (3.248) |
69.7 (2.744) |
471.4 (18.559) |
% ஈரப்பதம் | 75.3 | 73.6 | 72.2 | 68.6 | 60.5 | 54.0 | 52.5 | 56.6 | 65.8 | 71.8 | 76.7 | 77.3 | 67.08 |
சராசரி பொழிவு நாட்கள் | 10.3 | 10.1 | 9.7 | 8.6 | 6.2 | 3.0 | 2.1 | 2.5 | 5.0 | 6.9 | 9.4 | 12.2 | 86 |
ஆதாரம்: Hellenic National Meteorological Agency[5] |
சொற்பிறப்பியல்
தொகுஇதன் பெயர் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன. நூறு கண்களைக் கொண்ட ஆர்கஸ் என்பவன் முதன்முதலில் இந்த நகரை உருவாக்கினான் என்ற தொன்மம் உள்ளது. மேலும் இதன் பெயரானது பண்டைய காலத்தில் நகரத்தின் மூன்றாவது அரசரான புகழ்பெற்ற ஆர்கசுடன் தொடர்புடையது.
வரலாறு
தொகுபெலொப்பெனிசீயாவின் மீது படையெடுத்து வந்த டோரியரில் ஒரு பிரிவினர் இந்த நகர அரசை நிறுவினர் எனப்படுகிறது. இங்கு ஏறக்குறைய கி.மு. ஏழாம் நூற்றாண்டுவரை முடியாட்சி நடைபெற்றுவந்தது. இதன் முடிவுக்குப் பிறகு சுமார் இரண்டு நூற்றாண்டுகள் பிரபுக்களின் ஆட்சி நடைபெற்றது. இக்காலகட்டத்தில் இதன்மீது ஸ்பாட்டா தன் ஆதிக்கத்தைத் திணித்தது.[7]
கிரேக்கத்தைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் உத்திரவாதம் பெற்ற நாணயச் செலாவணி முறையை முதன்முதலில் நடைமுறைக்குக் கொண்டுவந்தது இந்த ஆர்கோஸ்தான். இசை, ஓவியம், நாடகம் முதலிய துறைகளில் புகழ்பெற்றவர்களை இந்த நகரம் கொண்டிருந்தது. சுமார் இருபதனாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு பெரிய நாடக அரங்கு இங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[7]
மக்கள் தொகை
தொகுகிமு 700 இல் இந்த நகரத்தில் குறைந்தது 5,000 பேர் வாழ்ந்தனர்.[8] கிமு நான்காம் நூற்றாண்டில், இந்த நகரத்தில் 30,000 மக்கள் வசித்து வந்தனர்.[9] 2011 கிரேக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 22,085 ஆகும். இது அர்கோலிசில் உள்ள மிகப்பெரிய நகரமாகும். இது தலைநகர் நாஃப்லியோவை விட பெரியது.
பொருளாதாரம்
தொகுஇப்பகுதியின் பொருளாதாரமானது முதன்மையாக வேளாண்மையை சார்ந்து உள்ளது. ஆரஞ்சுவகை பழங்கள் முதன்மையான பயிராகும். அதைத் தொடர்ந்து ஆலிவ் மற்றும் ஆப்ரிகாட் உள்ளன. இந்த பகுதி இதன் உள்ளூர் முலாம்பழம் வகை, ஆர்கோஸ் முலாம்பழம் (அல்லது ஆர்கிடிகோ) ஆகியவற்றிற்கும் பிரபலமானது. பால் பொருட்கள், பழங்களை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆகியவை முக்கியமான உள்ளூர் உற்பத்தியாக உள்ளன.
பண்டைய மற்றும் இடைக்கால நகரத்தின் கணிசமான எச்சங்கள் எஞ்சியிருக்கின்றன. அவை பிரபலமான சுற்றுலாத்தலங்கலாக உள்ளன.
போக்குவரத்து
தொகுஆர்கோசானது அண்டைப் பகுதிகளான ஏதென்ஸ் போன்றவற்றுடன் பேருந்து சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வாடகை சீருந்துகளை அஜியோஸ் பெட்ரோஸ் மற்றும் லைக்கி அகோர சதுக்கத்தில் காணலாம்.
இந்த நகரத்தில் ஒரு தொடருந்து நிலையமும் உள்ளது. தற்போது, எலனிக் ரயில்வே அமைப்பால் பெலோபொன்னீஸ் பகுதியில் உள்ள அனைத்து தொடருந்து சேவைகளும் காலவரையின்றி நிறுத்தப்பட்டதால் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஆர்கோஸ், நாஃப்பிலியோ மற்றும் கொரிந்தோஸ் ஆகிய இடங்களில் ஏதென்ஸ் புறநகர் தொடருந்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.[10][11] இறுதியாக 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடருந்து பாதையை மீண்டும் இயக்கும் நோக்கத்திற்காக மெட்ரிக் பாதை மற்றும் நிலையங்களின் பராமரிப்புக்காக எலெனிக் ரயில்வே அமைப்புடன் தங்கள் ஒத்துழைப்பை பெலோபொன்னீஸ் பிராந்திய நிர்வாகம் அறிவித்தது.[12][13]
கல்வி
தொகுஆர்கோசில் பரந்த அளவில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை அண்டையில் மக்கள் தொகை குறைந்த பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கும் சேவை செய்கின்றன. குறிப்பாக, நகரத்தில் ஏழு டிமோடிகா (துவக்கப் பள்ளிகள்), நான்கு ஜிம்னாசியா (இளையோர் உயர்நிலைப் பள்ளி), மூன்று லைசியம்கள் (மூத்தோர் உயர்நிலைப் பள்ளி), ஒரு தொழிற்கல்வி பள்ளி, ஒரு இசைப் பள்ளி அத்துடன் சுற்றுலா வணிகம் மற்றும் சமையல் துறை மற்றும் ஒரு முதுகலை ல்வியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பள்ளி துறை உள்ளது. நகரத்தில் இரண்டு பொது நூலகங்களும் உள்ளன.[14]
குறிப்புகள்
தொகு- ↑ "Population & housing census 2011 (2014 revision)" (PDF). National Statistical Service of Greece.
- ↑ 2.0 2.1 Bolender, Douglas J. (2010-09-17). Eventful Archaeologies: New Approaches to Social Transformation in the Archaeological Record. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4384-3423-0. பார்க்கப்பட்ட நாள் 1 January 2011.
- ↑ "ΦΕΚ B 1292/2010, Kallikratis reform municipalities". Government Gazette.
- ↑ "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece. Archived from the original (PDF) on 2015-09-21.
- ↑ "Κλιματικά Δεδομένα για επιλεγμένους σταθμούς στην Ελλάδα, Άργος (Πυργέλα)" [Weather Data for Weather Stations in Greece, Argos (Pyrgela] (in கிரேக்கம்).
- ↑ Oliver D. Hoover, Handbook of Coins of the Peloponnesos: Achaia, Phleiasia, Sikyonia, Elis, Triphylia, Messenia, Lakonia, Argolis, and Arkadia, Sixth to First Centuries BC [The Handbook of Greek Coinage Series, Volume 5], Lancaster/London, Classical Numismatic Group, 2011, pp. 157, 161.
- ↑ 7.0 7.1 வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 60–61.
- ↑ Urbanism in the Preindustrial World: Cross-Cultural Approaches, p. 37, கூகுள் புத்தகங்களில்
- ↑ Geology and Settlement: Greco-Roman Patterns, p. 124, கூகுள் புத்தகங்களில்
- ↑ "Archived copy". Archived from the original on 2014-09-19. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Νέα, Σιδηροδρομικά (January 10, 2015). "Σιδηροδρομικά Νέα: Ο ΟΣΕ υλοποιεί την εξαγγελία του για αξιοποίηση της Γραμμής Κόρινθο – Άργος -Ναύπλιο".
- ↑ "θα σφυρίξει ξανά το τρένο στη γραμμή Κόρινθος- Άργος- Ναύπλιο - To Vima Online". 2020-04-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-13.
- ↑ "Εξελίξεις στο θέμα του σιδηρόδρομου στην Περιφέρεια Πελοποννήσου - ert.gr". 2020-11-24. பார்க்கப்பட்ட நாள் 2020-12-13.
- ↑ "Μέγαρο "Δαναού", Άργος". November 16, 2008.