லியோபோல்டோ கிரெல்லி (பேராயர்)
லியோபோல்டோ கிரெல்லி (Leopoldo Girelli) (பிறப்பு: 13 மார்ச் 1953) இத்தாலி நாட்டின் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த பேராயார் ஆவார். இவர் தற்போது இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளில் வாத்திகான் நாட்டின் போப்பாண்டவரின் அப்போஸ்தல தூதராக 13 மார்ச் 2021 மற்றும் 13 செப்டம்பர் 2021 முதல் செயல்படுகிறார். முன்னர் இவர் போபாண்டவரின் தூதராக சிங்கப்பூர், இந்தோனேசியா, கிழக்கு திமோர், மலேசியா, புருணை, வியட்நாட், இஸ்ரேல், ஜெருசலம், பாலஸ்தீனம் மற்றும் சைப்பிரஸ் நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
பேராயர் லியோபோல்டோ கிரெல்லி Leopoldo Girelli | |
---|---|
| |
நியமனம் |
|
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 17 சூன் 1978 கியூலியோ ஒகியோனி-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | 17 சூன் 2006 அஞ்செலோ சொடானோ-ஆல் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 13 மார்ச்சு 1953 பிரிதோர், இத்தாலி |
குடியுரிமை | இத்தாலியர் |
வகித்த பதவிகள் |
|
படித்த இடம் | இறையியல் சமயக் கலாசாலை |
இந்திய கத்தோலிக்க குருமார்களுக்கு கோரிக்கை
தொகுஇந்தியாவிற்கான அப்போஸ்தல தூதுவர் என்ற முறையில் இவர், 29 அக்டோபர் 2021 அன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் செயல்படும் கத்தோலிக்க மதகுருமார்கள் சுதந்திரமான அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பதவிகளை வகிப்பதில் இருந்து விலகி இருக்க கேட்டுக்கொண்டார்.[1][2] [3]மேலும் தமிழ்நாடு ஆயர்கள் பேரரவை, மறைமாவட்ட நிர்வாகிகளின் அனுமதியின்றி கத்தோலிக்க மதகுருமார்கள் தனித்த அறக்கட்டளைகள் அல்லது சங்கங்களுடன் தொடர்புபடுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறித்தியுள்ளது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Close clergy’s personal trusts, Pope’s envoy instructs Tamil Nadu Bishops
- ↑ "Vatican orders priests to close private trusts". Archived from the original on 2021-11-06. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
- ↑ Keep priests from being financial power bases, nuncio warns Indian bishops
- ↑ Snap NGO ties: Catholic church to Tamil Nadu clergy
வெளி இணைப்புகள்
தொகு- "Archbishop Leopoldo Girelli". Catholic Hierarchy. [self-published]