லிலிட் காலோயன்

ஆர்மீனிய சதுரங்க வீராங்கனை

லிலிட் காலோயன் (Lilit Galojan) என்பவர் ஆர்மீனிய பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1983 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். 2009 ஆம் ஆண்டு முதல் பிடே அமைப்பு வழங்கும் ஆர்மீனிய பெண் கிராண்டு மாசுட்டர் பட்டம் மற்றும் 2010 முதல் அனைத்துலக சதுரங்க மாசுட்டர் பட்டங்களுடன் இவர் சதுரங்கம் ஆடி வருகின்றார்

லிலிட் காலோயன்
Lilit Galojan
Լիլիթ Գալոյան
2013 இல் லிலிட் காலோயன்
நாடுஆர்மீனியா
பிறப்பு17 சூன் 1983 (1983-06-17) (அகவை 41)
ஆர்மீனியா, ஏரவான்
பட்டம்பெண் கிராண்டு மாசுட்டர், அனைத்துலக சதுரங்க மாசுட்டர்
பிடே தரவுகோள்2285 (சூன் 2018)
உச்சத் தரவுகோள்2402 (மே 2010)
Lilit Galojan
Լիլիթ Գալոյան
Lilit Galojan at the European Chess Team Championship, Warsaw 2013
நாடுArmenia
பிறப்பு17 சூன் 1983 (1983-06-17) (அகவை 41)
Yerevan, Armenia
பட்டம்International Master, WGM
பிடே தரவுகோள்2285 (June 2018)
உச்சத் தரவுகோள்2402 (May 2010)

. இரண்டுமுறை ஆர்மீனிய பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டத்தை லிலிட் வென்றுள்ளார்[1].

சதுரங்க வாழ்க்கை

தொகு

2009 ஆம் ஆண்டில் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டமும், 2010 இல் அனைத்துலக சதுரங்க மாசுட்டர் பட்டமும் காலோயனுக்கு கிடைத்தது. 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் ஆர்மீனிய சாம்பியன் சதுரங்கப் போட்டியில் முதலிடம் பிடித்தார்.1997 இல் 14 வயதுக்கு உட்பட்டோர் போட்டி, 1998 இல் 16 வயதுக்கு உட்பட்டோர் போட்டி, 1999 இல் 18 வயதுக்கு உட்பட்டோர் போட்டிகளையும் வென்றார். மேலும் இவர் 2008, 2009 ஆம் ஆண்டுகளில் ஆர்மீனியாவின் முதுநிலை சதுரங்க சாம்பியன் பட்டங்களை இரண்டு முறை வென்றார்[1]. 2007 இல் பாயரில் நடைபெற்ற பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் முதல் பரிசை இவர் பெற்றார். 35 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 38 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 39 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 40 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 41 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் ஆர்மீனியாவின் சார்பாக லிலிட் கலந்து கொண்டு விளையாடினார்[2]. 2009, 2011, 2015 ஆம் ஆண்டுகளில் உலக அளவில் நடைபெற்ற அணிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டியிலும்[3], 2005, 2009, 2011, 2015, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியிலும் லிலிட் காலோயன் பங்குபெற்று விளையாடினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "All Women's Champions of Armenia". Armchess. Archived from the original on 30 September 2011. பார்க்கப்பட்ட நாள் 3 June 2013.
  2. Results of Lilit Galojan at Women Chess Olympids at olimpbase.com
  3. Results of Lilit Galojan at Women World Team Chess Championships at olimpbase.org

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிலிட்_காலோயன்&oldid=3857691" இலிருந்து மீள்விக்கப்பட்டது