லிவாவுல் இஸ்லாம் (சிற்றிதழ்)

லிவாவும் இஸ்லாம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1906ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.

ஆசிரியர்கள்

தொகு
  • இரவண சமுத்திரம் முகம்மது கௌஸ்
  • ஹாஜி ஜிலானி

பொருள்

தொகு

"லிவாவுல் இஸ்லாம்" என்றால் 'இஸ்லாமியக் கொடி' என்று பொருள்படும்

உள்ளடக்கம்

தொகு

20ம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்தில் இச்சிற்றிதழ் வெளிவந்துள்ளது. இக்காலகட்டங்களில் தமிழ்மொழி மூலமாக இசுலாமியர்களுக்கு மார்க்க ரீதியான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் குறைவாகவே காணப்பட்டன. இக்காலகட்டத்தில் இசுலாமிய பிரசார இயக்கங்களும் அதிகமான தாக்கங்களை செலுத்திவரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இசுலாமிய அடிப்படை கொள்கைகள், கருத்துக்களை விளக்கும் ஓர் இதழாக இவ்விதழ் காணப்பட்டது. இசுலாமிய கொள்கைகள் குறித்து ஏற்படக்கூடிய கருத்து முரண்பாடுகளுக்கு ஓரளவில் விளக்கங்களை வழங்கியிருப்பதையும் இவ்விதழ்களில் அவதானிக்கலாம்.