லீவா பாலைவனச்சோலை

லீவா பாலைவனச்சோலை என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபி அமீரகத்தில் அடங்கியுள்ள பெரிய பாலைவனச் சோலைப் பகுதி ஆகும். இது பாரசீகக் குடாக் கரையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலும், அபுதாபி நகரத்தில் இருந்து தென் தென்மேற்கில் 150 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது ரப் அல் காலி பாலைவனத்தின் விளிம்புப்பகுதியில், ஏறத்தாழ 23°08′N 53°46′E / 23.133°N 53.767°E / 23.133; 53.767 ஐ மையமாகக்கொண்டு அமைந்துள்ல இப்பகுதி, கிழக்கு மேற்காக 100 கிலோமீட்டர்வரை நீண்டு அமைந்துள்ளது. இப் பாலைவனச் சோலைப் பகுதியில் சுமார் 50 ஊர்கள் உள்ளன. முசாய்ரி என்னும் இடம் இப்பகுதியின் பொருளாதார மையமாகவும் புவியியல் மையம் ஆகவும் விளங்குகிறது. அபுதாபியிலிருந்து வரும் நெடுஞ்சாலை இவ்வ்விடத்தில் இரண்டாகப் பிரிந்து ஒரு சாலை கிழக்கு நோக்கி 65 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கிழக்குக் கோடியிலுள்ள ஊரான மதார் பின் உசாய்யாவுக்கும், மற்றச்சாலை மேற்கு நோக்கி மேற்குக் கோடியிலுள்ள அராதா என்னும் ஊருக்கும் செல்கின்றன. இப் பகுதியின் மக்கள்தொகை பற்றிய புள்ளிவிபரங்கள் எதுவும் கிடையாது. எனினும் செய்மதிப் படங்களைக் கொண்டு செய்யப்பட்ட மதிப்பீடுகளின்படி இப் பகுதியில் 50,000 க்கும் 150,000 க்கும் இடைப்பட்ட அளவில் மக்கள் வாழ்வதாகத் தெரிகிறது.[1][2][3]

லீவா பாலைவனச்சோலை
லீவா பாலைவனச்சோலையில் உள்ள ஊர்களை இணைக்கும் நெடுஞ்சாலை

மேற்கோள்கள்

தொகு
  1. The Report: Abu Dhabi 2010. Oxford Business Group. 21 March 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781907065217 – via Google Books.
  2. "Al Gharbia". The Report Abu Dhabi 2010. Oxford Business Group. 2010. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-9070-6521-7.
  3. "Liwa Oasis". Lexiorient. பார்க்கப்பட்ட நாள் 2012-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீவா_பாலைவனச்சோலை&oldid=4102709" இலிருந்து மீள்விக்கப்பட்டது