லீ இ. மெக்மகோன்
லீ இ. மெக்மகோன் (Lee E. McMahon) (1931–1989) என்பவர் அமெரிக்காவின் கணினி அறிவியல் முன்னோடிகளில் ஒருவர். இவர் தூய லூயிசுப் பல்கலைக்கழகத்தில் (St. Louis University) பட்டம் பெற்றார். அதற்கு பின்னர், மனவியலில் துறையில் முனைவர் பட்டத்தை, அமெரிக்காவின் ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றவர். ஆயினும், யூனிக்சு முறையில் பல நிரலாக்க முறைமைக்கு முன்னோடியாக திகழ்ந்தார். பெல் ஆய்வுக்கூடங்களில் 1963 ஆண்டிலிருந்து 1989 வரை, பணியாற்றினார். அங்கு யுனிக்சு என்ற இயக்குதளத்தின் தொடக்கநிலை பங்களிப்புகளைச் செய்தார். குறிப்பாக 'செட்' (sed- stream editor)தொகுப்பு முறையில் செய்தார்.[1] மேலும், பல யூனிக்சு உறுதுணை முறைகளில் (comm, qsort, grep, index, cref, tip (Unix utility), Datakit) இவரின் பங்களிப்பு அளப்பரியது ஆகும்.[2] விளையாட்டுத் துறையில் இவர் அமைத்த முறைமை (McMahon system tournament) இன்றளவும், சதுரங்கத்தில் பயன்படுத்தப் படுகிறது.
லீ இ. மெக்மகோன் | |
---|---|
பிறப்பு | 1931 |
இறப்பு | 1989 |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆர்வர்டு பல்கலைக் கழகம் |
பணி | கணிய அறிவியல் அறிஞர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ In the Beginning: Unix at Bell Labs, பார்க்கப்பட்ட நாள் 2008-11-21
- ↑ McIlroy, M. D. (1987). A Research Unix reader: annotated excerpts from the Programmer's Manual, 1971–1986 (PDF) (Technical report). CSTR. Bell Labs. 139.
வெளியிணைப்புகள்
தொகு- இந்த இணையப்பக்கத்தில் அவரின் நிழற்படத்தையும், பிற குறிப்புகளையும் காணலாம்.