லீ ஜூன் கியுக்

லீ ஜூன் கியுக் (ஆங்கில மொழி: Lee Joon-hyuk) (பிறப்பு: மார்ச்சு 13, 1984) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார்.[2] இவர் 2006 ஆம் ஆண்டு முதல் சிட்டி ஹால் (2009), சிட்டி ஹண்டர் (2011), ஸ்ட்ரேஞ்சர் (2017) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு 'பெஸ்ட் விவ்ஸ் கிளாப்ஸ்' என்ற தொடருக்காக 'புதிய நட்சத்திர விருதும்' வென்றுள்ளார்.

லீ ஜூன் கியுக்
பிறப்புமார்ச்சு 13, 1984 (1984-03-13) (அகவை 40)
சியோல், தென் கொரியா
கல்விஹன்ஷின் பல்கலைக்கழகம் – விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்புகள்
டானூக் பல்கலைக்கழகம் – நிகழ்த்து கலைகள்[1]
பணிநடிகர்
வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை
முகவர்சிக்னல் பொழுதுபோக்கு குழு

தொழில்

தொகு

லீ ஜூன் கியுக் 2006 ஆம் ஆண்டு மகிழ்கலை கலைஞராக ஹிப் ஹாப் டைபூனின் இசைக்குழுவின் இசை காணொளி மூலம் அறிமுகமானார். 2007 இல் 'பெஸ்ட் விவ்ஸ் கிளாப்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானர்.[3][4] அந்த தொடரில் இவரில் நடிப்பு பலரால் கவனிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 2009 இல் திரீ பிரோதெரஸ்[5][6] என்ற தொடரில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். 2010 இல் ஐ ஆம் லெஜண்ட் என்ற தொடரில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்தார். அதை தொடர்ந்து சிட்டி ஹண்டர் (2011), மேன் பிறோம் தி ஏகுவடோர் (2012) போன்ற தொடர்களில் நடித்தார்.[7]

2011 ஆம் ஆண்டில் லீ 'கேரிட் பை தி விண்ட்' என்ற உண்மைநிலை நிகழ்ச்சியில் தோன்றினார். இது 'சண்டே நைட்' என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்பட்டது, இந்த நிகழ்ச்சி பல ஆண் பிரபலங்கள் அமெரிக்காவில் சாலைப் பயணம் சென்று இசையைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். 2012 இல் சீன தொலைக்காட்சி நாடகமான ஹாஃப் எ ஃபேரிடேலில் நடித்ததன் மூலம் தனது கொரியன் வாவ் என்ற இணைய ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்தினார்.

லீ ஜூன் 19, 2012 முதல் மார்ச் 18, 2014[8][9][10] வரை தனது கட்டாய இராணுவ சேவைக்காக சென்று பணியாற்றினார். 'மை ஸ்பிரிங் டே'[11] என்ற தொடரின் மூலம் மீண்டும் நடிப்புத்துறைக்கு வந்தார். 2017 ஆம் ஆண்டில் குற்ற திரில்லர் தொடரான 'இசுரேஞ்சர்' மற்றும் கற்பனை காவியமான அலாங் வித் தி காட்ஸ்: தி டூ வேர்ல்ட்ஸ்[12] என்ற திரைப்படத்திலும் நடித்து நல்ல வேற்பை பெற்றார். அதை தொடர்ந்து 2018 இல் மருத்துவ காதல் தொடரான 'அ போம் அ டே' என்ற தொடரில் கதாநாயகனாக நடித்தார்.[13]

மேற்கோள்கள்

தொகு
  1. "'조강지처클럽' 이준혁, 알고보니 신촌의 커피프린스?". JoongAng Ilbo (in கொரியன்). January 27, 2008.
  2. "이준혁│My name is." TenAsia (in கொரியன்). June 2, 2009. Archived from the original on ஜூன் 12, 2018. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 3, 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "이준혁 "한류 스타 킬러라고요? 실속 없는 선수죠"". Nocutnews (in கொரியன்). May 15, 2009.
  4. "② 이준혁 "'조강지처클럽'은 내 연기 인생에 '조강지처'"". Hankyung (in கொரியன்). May 9, 2009.
  5. Hong, Lucia (24 May 2010). "Three Brothers records solid ratings for 14th win". 10Asia. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
  6. Lee, Jong-gil (3 March 2011). "Lee Jun-hyuk, Lee Jong-suk, Seo Hyo-rim to expand career into Japan". 10Asia. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
  7. Lee, Jin-hyuk (18 May 2011). "PREVIEW: SBS TV series City Hunter". 10Asia. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
  8. Sunwoo, Carla (4 May 2012). "Lee Jun-hyuk to fulfill his military service". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
  9. Sunwoo, Carla (30 May 2012). "Lee Jun-hyuk bids farewell, for now". Korea JoongAng Daily. http://koreajoongangdaily.joinsmsn.com/news/article/Article.aspx?aid=2953587. பார்த்த நாள்: 2012-11-19. 
  10. Hong, Lucia (13 June 2012). "Lee Jun-hyuk bids farewell to fans to begin military duties next week". 10Asia. http://www.asiae.co.kr/news/view.htm?idxno=2012061314220508201. பார்த்த நாள்: 2012-11-19. 
  11. "Lee Joon-hyuk to come back with "My Spring Days"". Hancinema. July 13, 2014.
  12. "[Interview] Lee Joon-hyuk Believes He's No Bad Guy in Works Like "Secret Forest" and "Along With the Gods"". Hancinema. August 22, 2019.
  13. "Medical drama with comedy, but without doctors, 'A Poem, a Day'". The Korea Herald. March 20, 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_ஜூன்_கியுக்&oldid=3865839" இலிருந்து மீள்விக்கப்பட்டது