லீ டோ கியூன்

லீ டூ கியூன் (임동현) (ஆங்கில மொழி: Lee Do-hyun) (பிறப்பு: ஏப்ரல் 11, 1995) என்பவர் தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் ஹோட்டல் டெல் லூனா (2019), 18 எகைன் (2020), சுவீட் ஹோம் (2020), யூத் ஒப் மே (2021) போன்ற பல கொரியன் தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

லீ டோ கியூன்
பிறப்புலிம் டோங்-கியூன்
ஏப்ரல் 11, 1995 (1995-04-11) (அகவை 29)
கோயாங், கியோங்கி மாகாணம், தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2017–இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

லீ டோ கியூன் ஏப்ரல் 11, 1995 அன்று தென் கொரியாவில் கியோங்கி-டூவில் கோயாங்கில் பிறந்தார். இவர் இவரது குடும்பத்தின் மூத்த மகனாகவும் இவருக்கு டோங் கியூக் என்ற அறிவுசார் இயலாமையில் ஒரு தம்பி உள்ளார்.[1] இவர் சுங்-ஆங் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் நாடகத் துறையில் கல்வி பயின்று வருகின்றார்.[2]

தொழில்

தொகு

இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கருப்பு நகைச்சுவைத் தொடரான 'பிரிசன் பிளேபுக்' என்ற தொடர் மூலம் நடிகர் ஜங் கியுங்-ஹோவின் கதாபாத்திரத்தின் இளம்வயது கதாபாத்திரத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானர்.[3] அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் காதல் தொடரான 'ஸ்டில் 17' என்ற தொடரில் உயர்நிலைப் பள்ளி மாணவனாக நடித்தார்.[4] இவரது நடிப்பிற்காக 2018 எஸ்.பி.எஸ் நாடக விருதுகளில் அஹ்ன் ஹியோ-சியோப் மற்றும் ஜோ ஹியூன்-சிக் ஆகியோருடன் இணைந்து "ஆண்டின் சிறந்த கதாபாத்திரம்" என்ற விருதின் பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டார். அதே ஆண்டில் 'கிளீன் வித் பேஷன் போர் நவ்' என்ற தொடரிலும் பெண் முன்னணி கதாபாத்திரத்தின் தம்பியாகவும், டேக்வாண்டோ விளையாட்டு வீரராகவும் நடித்துள்ளார்.[5]

2019 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான கற்பனை தொலைக்காட்சித் தொடரான 'ஹோட்டல் டெல் லூனா' என்ற தொடரில் சிறப்புத்தோற்றத்தில் நடித்தார்.[6] இந்த தொடர் கம்பி வடத் தொலைக்காட்சியில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட கொரிய நாடகங்களில் ஒன்றாகும்.

2020 ஆம் ஆண்டில் தனது முதல் முன்னணி கதாபாத்திரமான '18 எகைன்' என்ற தொடரில் நடித்தார்.[7] இது 2009 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான '17 எகைன்' என்ற படத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். அவரது நடிப்பு 57 வது பெய்சாங் கலை விருதுகளில் தொலைக்காட்சியில் சிறந்த புதிய நடிகருக்கான விருதைப் வென்றுள்ளார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் நெற்ஃபிளிக்சு தொடரான 'சுவீட் ஹோம்'[8] என்ற தொடரிலும், 2021 ஆம் ஆண்டு 'யூத் ஒப் மே' என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Lee Won-sun (October 7, 2020). "Actor Lee Dohyun Opens up about His Disabled Younger Brother". https://www.insight.co.kr/news/306970. 
  2. Kim, Na-yeon (November 18, 2020). ""많이 컸다" 이도현, 한계 없을 성장 [인터뷰]". Asia Business Daily. Archived from the original on ஜனவரி 19, 2021. பார்க்கப்பட்ட நாள் ஜூன் 28, 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. Kim, Eun-ae (November 23, 2017). "신예 이도현, '슬기로운감빵생활' 정경호 아역으로 강렬 눈도장". News Chosun. http://news.chosun.com/site/data/html_dir/2017/11/23/2017112301910.html. 
  4. Yu, Cheong-hee (May 28, 2018). "이도현, '서른이지만 열일곱입니다' 합류...안효섭 절친으로 '매력 발산'". Ten Asia Hankyung இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 4, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190404133504/http://tenasia.hankyung.com/archives/1501114. 
  5. Kim, Myung-mi (February 7, 2018). "'슬빵' 이도현, JTBC '일단 뜨겁게 청소하라' 출연확정(공식)". Newsen. http://www.newsen.com/news_view.php?uid=201802070903340310. 
  6. Tae, Yu-na (August 5, 2019). "'호텔 델루나' 이도현, 아이유 향한 애틋한 고백→배신 '충격'". Hankyung. https://www.hankyung.com/entertainment/article/2019080528794. 
  7. Seon, Mi-kyung (February 25, 2020). "Kim Ha Neul, Yoon Sang Hyun, Lee Do Hyun to co-star in new drama 18 Again". Osen. Archived from the original on ஆகஸ்ட் 20, 2020. பார்க்கப்பட்ட நாள் March 22, 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. Park, Soo-in (August 7, 2019). "이도현 측 "'스위트홈' 제안받고 검토중" 이응복PD 만날까(공식입장)". Newsen (Naver). https://entertain.naver.com/now/read?oid=609&aid=0000151113. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_டோ_கியூன்&oldid=3719436" இலிருந்து மீள்விக்கப்பட்டது