லீ மெரிடியன்

லீ மெரிடியன் ஒரு உயர்-ரக தர மதிப்பீடு கொண்ட சர்வதேச ஹோட்டல் ஆகும். இதன் தலைமையகம் ஃபிரான்ஸ் மற்றும் லண்டன் உள்ளது. ஸ்டார்வுட் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்ஸ்[1] வேர்ல்ட்வைட் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த ஹோட்டல், உலகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைந்துள்ள 99 ஹோட்டல்களுள் ஒன்று.

வரலாறு

தொகு

ஏர் ஃபிரான்ஸ், லீ மெரிடியன் நிறுவனத்தினை 1972 ஆம் ஆண்டு நிறுவியது. தனது வாடிக்கையாளர்களுக்கு தனது வீட்டிலிருப்பது போன்ற உணர்வினை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. லீ மெரிடியன் நிறுவனத்தின் முதல் ஹோட்டலாக லீ மெரிடியன் எடோயில் ஆயிரம் அறைகள் கொண்டதாக பாரிஸ் நாட்டில் உருவானது. தனது துரித செயல்பாட்டின் மூலம் இரு ஆண்டுகளில், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் 10 ஹோட்டல்களை தன்வசப்படுத்தியது. தனது முதல் ஆறு வருட உழைப்பில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, பிரஞ்சு மேற்கிந்தியத் தீவுகள், கனடா, தென்னமேரிக்கா, மத்திய கிழக்குப் பகுதிகள் மற்றும் மொரிஷியஸ் போன்ற இடங்களில் சுமார் 21 ஹோட்டல்களை உரிமையாகக் கொண்டிருந்தது. லீ மெரிடியன், 1991 ஆம் ஆண்டின்படி, சுமார் 58 ஹோட்டல்களை தன்வசம் கொண்டிருந்தது.

1994 ஆம் ஆண்டின் பிற்பாதியில், லீ மெரிடியன் ஹோட்டலை லண்டனின் ஹோட்டல் நிறுவனமான ஃபோர்ட் குழு வாங்கியது. பின்னர் 1996 ஆம் ஆண்டில் கிராணாடா நிறுவனத்தினால் வாங்கப்பட்டது. காம்பஸ் குழு மற்றும் கிராணாடா நிறுவனமும் 2000 ஆம் ஆண்டின் கோடைப் பருவத்தில் இணைந்தது. 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்று நிறுவனங்களாகப் பிரிந்தது. லீ மெரிடியன், ஹெரிடேஜ் ஹோட்டல்கள் மற்றும் போஸ்தௌஸ் ஃபோர்ட் என்ற மூன்று பெயருடன் அந்த நிறுவனம் பிரிந்தது.

மே 2001 இல், நோமுரா குழுவானது லீ மெரிடியன் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்ஸ்களை காம்பஸ் குழுவிடம் இருந்து சுமார் 1.9 பில்லியன் யூரோக்களுக்கு வாங்கியது. அத்துடன் பிரின்சிபல் ஹோட்டல்களுடன் தன்னை இணைத்துக்கொண்டது. டிசம்பர் 2003 இல் லீ மெரிடியனின் மேம்பட்ட பங்கினை லெஹ்மேன் சகோதரர்களின் குழு வாங்கியது.

இறுதியாக நவம்பர் 24, 2005 இல் ஸ்டார்வுட் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்ஸ் குழுமம்[2] லீ மெரிடியன் ஹோட்டல்களின் வணிகத்தினைக் கைப்பற்றியது. இதனை குத்தகைக்கு விடுதல் மற்றும் இதர பணிகளுக்கு செயல்படுத்துதல் போன்றவற்றினை லெஹ்மேன் சகோதரர்கள் மற்றும் ஸ்டார்வுட் கேபிடல் ஆகியவை இணைந்து செய்கின்றன.

2011 ஆம் ஆண்டில், லீ மெரிடியன் தனது நூறாவது[3] ஹோட்டலினை இந்தியாவிலுள்ள கோயம்புத்தூரில் திறந்தது.

இருப்பிடம்

தொகு

லீ மெரிடியன் ஹோட்டல்[4] ராஷ்டிரபதி பவனில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலா வரும் விருந்தினர்கள், அருகிலுள்ள பகுதிகளான ஜன்டர் மந்தர் (2 கிலோ மீட்டர்), இந்திய வாசல் (ஒரு கிலோ மீட்டர்) மற்றும் செங்கோட்டை என பலவிடங்களைப் பார்வையிடுவதன் மூலம் தனது பயணத்தினை மறக்க முடியாத பயணமாக மாற்ற இயலும்.

போக்குவரத்து வசதிகள்

தொகு

லீ மெரிடியன் ஹோட்டலுக்கு அருகே அமைந்துள்ள போக்குவரத்து வசதிகள் பின்வருமாறு: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் : 20 கிலோ மீட்டர்/ 40 நிமிடங்கள் புது டெல்லி ரயில் நிலையம் : 3 கிலோ மீட்டர்/ 15 நிமிடங்கள்

லீ மெரிடியன் அறைகள்

தொகு

எக்ஸ்கியூட்டிவ் அறை, சுப்பீரியர் அறை, குழு அறை, எக்ஸ்கியூட்டிவ் சூட் மற்றும் பிரிமீயம் அறை போன்ற வெவ்வேறு வகைகளில் அறைகள்[5] லீ மெரிடியன் ஹோட்டலில் வழங்கப்படுகின்றன. இங்கு பாதுகாப்பு, தொலைபேசி வசதி, துணி தேய்த்தல் மற்றும் செய்தித்தாள் வசதிகள் வழங்கப்படுகின்றன.

லீ மெரிடியன் வசதிகள்

தொகு

விமான நிலையத்திற்கு கூட்டிச் செல்வது மற்றும் அழைத்து வருவது, மருத்து நீருற்று, வாடகைக்கு கார் மற்றும் பண பரிமாற்றம் என பல்வேறு விதமான தேவைகளை லீ மெரிடியன் ஹோட்டல் பூர்த்தி செய்கிறது.

அடிப்படை வசதிகள்

தொகு

கம்பியில்லா இணையச்சேவை, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், பார், காஃபி, அறைச் சேவை, இணைய வசதி, வணிக மையம், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி மையம் ஆகியவை அடிப்படை வசதிகளாக இங்கு வழங்கப்படுகின்றன.

உணவு மற்றும் குடிபானங்கள்

தொகு

பார், உணவகம், காஃபி ஷாப் மற்றும் விருந்து உண்ணும் பகுதி ஆகியவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

வணிகச் சேவைகள்

தொகு

வணிக மையம், கூட்ட அரங்கு வசதிகள், சந்திப்பு அறை, மாநாட்டு அறை போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

மறு உருவாக்க சேவைகள்

தொகு

குழந்தைகள் நீச்சல் குளம், உடற்பயிற்சி செய்யும் இடம், உடல்நிலை நலத்திற்குரிய அரங்குகள், உடற்பிடிப்பு மையம் மற்றும் நீராவி குளியல் போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

பயணச் சேவைகள்

தொகு

பயண உதவிகள், வாகன நிறுத்துமிடம், இலவச நிறுத்துமிடம், உள் அரங்கு நிறுத்துமிடம், கார் நிறுத்தத்தில் செய்யும் பணியாட்கள் போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

தனிப்பட்ட சேவைகள்

தொகு

24 மணி நேர வரவேற்பு பகுதி, 24 மணி நேர அறைச்சேவை, குழந்தை பராமரிப்பவர்கள், துணி சலவை செய்பவர்கள், உலர்ந்த துணி சுத்தம் செய்தல், அறைச்சேவை போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

இதர வசதிகள்

தொகு

24 மணிநேர பாதுகாப்பு, வரவேற்பு பகுதி மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கும்பகுதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

குறிப்புகள்

தொகு
  1. "Brand Overview". starwoodhotels.com. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  2. "Starwood Capital Group Acquires Le Meridien Hotels & Resorts Portfolio". hospitalitynet.org. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  3. "Le Meridien Celebrates a New Era with the Unveiling of Its 100th Hotel, Le Méridien Coimbatore in India". reuters.com. Archived from the original on 19 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  4. "Le Meridien New Delhi". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  5. "Hotels Rooms". lemeridiennewdelhi.com. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Le Méridien
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_மெரிடியன்&oldid=4062647" இலிருந்து மீள்விக்கப்பட்டது