லும்பினி மாநில மருத்துவமனை
லும்பினி மாநில மருத்துவமனை (Lumbini Provincial Hospital) நேபாளத்தின் லும்பினி மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாகும். மருத்துவமனை பூத்வல் நகரில் உள்ளது. பிராந்தியத்தில் உள்ள பழமையான மருத்துவமனைகளில் ஒன்றாக கருதப்படும் இம்மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத ஏழைக் குடிமக்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு வழங்கும் ஒரு முக்கியமான ஆதாரமாகவும் கருதப்படுகிறது. [1]
வரலாறு
தொகுமறைந்த பிரதம மந்திரி சந்திர சம்சர் ஜேபி ராணா ராயல் பேலசு நிலையத்திற்காக 1910-1911 காலத்தில் 6 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவமனையை நிறுவினார். இந்த சிறிய மருத்துவமனை காலப்போக்கில் மேம்படுத்தப்பட்டது. தற்போதைய மருத்துவமனை 1963 -1964 காலத்தில் 50 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வந்தது.
உள்ளூர் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய 29 மருத்துவர்கள், 31 செவிலியர்கள், சராசரியாக நாளொன்றுக்கு 19 பேருக்கு சேவை அளித்து வருகின்றனர். படுக்கைகளின் எண்ணிக்கை பின்னர் 200 ஆக உயர்த்தப்பட்டது [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lumbini Zonal Hospital". பார்க்கப்பட்ட நாள் 24 December 2020.
- ↑ "Emergency Services Provided" (PDF). Lumbini Zonal Hospital. பார்க்கப்பட்ட நாள் 24 December 2020.