லூதியானா நகராட்சி ஆணையம்

லூதியானா நகராட்சி ஆணையம் (Ludhiana Municipal Corporation) இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் முக்கியமாக நகர்ப்புறத்தை ஆளும் ஒரு உள்ளூர் அமைப்பாகும். [1] லூதியானா மாநகராட்சி என்றும் இதை அழைக்கலாம். இந்தியாவில் மாநகராட்சி பொறிமுறையானது பிரித்தானிய ஆட்சியின் போது 1688 ஆம் ஆண்டு மெட்ராசு ( சென்னை ) நகராட்சி ஆணையம் உருவாக்கப்பட்டது, பின்னர் 1762 ஆம் ஆண்டில் பம்பாய் ( மும்பை ) மற்றும் கல்கத்தா ( கொல்கத்தா ) நகரங்களில் நகராட்சி ஆணையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. [2] லூதியானா நகராட்சி ஆணையம் நகரத் தந்தை தலைமையில் செயல்படுகிறது. ஆணையரால் நிர்வகிக்கப்படுகிறது. லூதியானா நகராட்சி ஆணையம் நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செயல்பாடுகளுடன் உருவாக்கப்பட்டது.

லூதியானா நகராட்சி ஆணையம்
Ludhiana Municipal Corporation
வகை
வகை
தலைமை
நகரத்தந்தை
மானவ் சிங் பால்கர்
மூத்த துணை நகரத்தந்தை
சாம் சுந்தர் மல்கோத்ரா
துணை நகரத்தந்தை
சரப்சித்து கவுர்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்95
அரசியல் குழுக்கள்
  சுயேட்சை: 4 இடங்கள்
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்

சிக்கல்கள்

தொகு

லூதியானா உள்ளிட்ட இந்திய நகரங்களில் சுற்றும் தெரு மாடுகள் அச்சுறுத்தலாக உள்ளன. [3] [4] பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது பசு தாக்குதல்கள் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சாலையில் நிற்கும் மாடுகள் மீது வாகனங்கள் மோதுவது, இந்தியாவில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளுக்கு காரணமாகும். [5] 2021 ஆம் ஆண்டில், லூதியானா மாநகராட்சியில் தெரு பசுக்கள் பராமரிப்பு நிதி ₹3.5 கோடியை வசூலித்துள்ளது.. இந்நகரத்தில் நூற்றுக்கணக்கான மாடுகள் பொது இடங்களில் தெருக்களில் சுற்றித் திரிகின்றன. [6]

வருவாய் ஆதாரங்கள்

தொகு

மாநகராட்சிக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருமான ஆதாரங்கள் பின்வருமாறு. [7] [8] [9]

வரி மூலம் வருவாய்

தொகு

மாநகராட்சிக்கான வரி தொடர்பான வருவாய் பின்வருமாறு.

  • சொத்து வரி.
  • தொழில் வரி.
  • கேளிக்கை வரி.
  • சரக்கு மற்றும் சேவை வரி போன்ற மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்கள்.
  • விளம்பர வரி.

வரி அல்லாத மூலங்களிலிருந்து வருவாய்

தொகு

மாநகராட்சிக்கான வரி அல்லாத வருவாய் பின்வருமாறு.

  • நீர் பயன்பாட்டு கட்டணம்.
  • ஆவணப்படுத்தல் சேவைகளின் கட்டணம்.
  • மாநகராட்சி சொத்திலிருந்து பெறப்பட்ட வாடகை.
  • நகராட்சி பத்திரங்களிலிருந்து நிதி.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ludhiana Municipal Corporation (MC) election results 2018: Full list of ward-wise winners from all parties". The Financial Express. 27 February 2018. http://www.financialexpress.com/india-news/ludhiana-municipal-corporation-mc-election-results-2018-full-list-ward-wise-winners-from-congress-aap-bjp-sad-lip/1081556/. பார்த்த நாள்: 2018-03-24. 
  2. "City Mayors: Indian Mayors". http://www.citymayors.com/mayors/indian-mayors.html. பார்த்த நாள்: 29 October 2021. 
  3. Nair, Rajesh B. (28 February 2020). "Stray cattle a menace on several roads" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/puducherry/stray-cattle-a-menace-on-several-roads/article30936238.ece. 
  4. "Stray cattle menace returns to haunt road users" (in en-IN). The Hindu. 7 December 2019. https://www.thehindu.com/news/cities/Madurai/stray-cattle-menace-returns-to-haunt-road-users/article30233185.ece. 
  5. "Mansa stray cattle menace: Victim’s kin keep body on road, say demands not met" (in en). The Indian Express. 24 September 2019. https://indianexpress.com/article/india/stray-cattle-issue-in-mansa-victims-kin-keep-body-on-road-say-demands-not-met-6020075/. 
  6. "Cow cess runs in crores, but stray-cattle menace continues in Ludhiana" (in en). Hindustan Times. 23 July 2021. https://www.hindustantimes.com/cities/chandigarh-news/despite-cow-cess-running-in-crores-stray-cattle-s-reign-of-terror-continues-in-ludhiana-101627063869428.html. 
  7. Jadhav, Radheshyam (3 December 2020). "Why civic bodies in India need municipal bonds" (in en). www.thehindubusinessline.com. https://www.thehindubusinessline.com/news/why-civic-bodies-in-india-need-municipal-bonds/article33237962.ece. 
  8. "Municipal corporations under severe strain as revenues sink: RBI Report" (in en). Business Today. 2 December 2021. https://www.businesstoday.in/latest/economy/story/municipal-corporations-under-severe-strain-as-revenues-sink-rbi-report-314215-2021-12-02. 
  9. "If cities are to deliver better quality life, need to have business models which are sustainable" (in en). Financialexpress. 17 May 2022. https://www.financialexpress.com/opinion/if-cities-are-to-deliver-better-quality-life-need-to-have-business-models-which-are-sustainable/642276/. 

புற இணைப்புகள்

தொகு