லூதியானா நகர மையம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் முன்மொழியப்பட்ட திட்டம்

லூதியானா நகர மையம் (Ludhiana City Centre) பல கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு திட்டமாகும். இப்போது இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.[1] [2]2003 ஆம் ஆண்டில்[3] இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சாகீத்து பகத் சிங் நகரில் பகோவால் சாலைக்கு அருகில் இம்மையம் தொடங்கப்பட்டது. பேரங்காடிகள், உணவு விடுதி, அரங்கம், உரை மேடை, ஐந்து நட்சத்திர விடுதி ஆகிய ஐந்து கூறுகளை உள்ளடக்கியதாக இம்மையம் திட்டமிடப்பட்டது.[4] 25 ஏக்கர் (100,000 சதுரமீட்டர்) பரப்பளவில் வணிக வளாகங்கள், 12 பல்திரையரங்குகள், குடியிருப்புகள் மற்றும் மகிழ்விடங்கள், உலங்கு வானூர்தி இறங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றையும் பெற்றிருக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.[5]

பின்னர், இத்திட்டத்தில் பல கோடி ஊழல் நிகழ்ந்துள்ளது [6][7] என்ற குற்றச்சாட்டுடன் பெரும் சர்ச்சையில் எழுந்தது.[8] இப்போது அதன் கட்டுமானம் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.[9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. Service, Tribune News. "Major land scam of LIT under Vigilance scanner". Tribuneindia News Service.
  2. "Ludhiana City Centre to be converted into govt hospital, will be named after Bhagat Singh: AAP", The Indian Express (in ஆங்கிலம்), 2022-03-30, பார்க்கப்பட்ட நாள் 2024-10-05
  3. "Ludhiana City Centre: Dream project hangs in the balance". Hindustan Times. 9 May 2017.
  4. "Ludhiana City Centre launched | Business Standard News". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-18.
  5. Jyoti Kamal (2007-09-21). "Ludhiana scam: Enough evidence to nail Ex-Punjab CM:News18 Videos". Ibnlive.in.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-18.
  6. Ludhiana, PTI (2009-11-07). "Hearing in Ludhiana scam adjourned; Amarinder fails to turn up | Latest News & Updates at Daily News & Analysis". Dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.
  7. "Explained: What is the Ludhiana City Centre 'scam'?". 29 November 2019.
  8. "The Tribune, Chandigarh, India - Real Estate". Tribuneindia.com. 12 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.
  9. "Stalled projects bane of ward number 59 - Times of India". Timesofindia.indiatimes.com. 2009-10-24. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.
  10. Service, Tribune News. "State government urged to revive 'abandoned' City Centre project". Tribuneindia News Service.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூதியானா_நகர_மையம்&oldid=4106256" இலிருந்து மீள்விக்கப்பட்டது