லூயிஸ் கெய்ல்ஹாவ்

நோர்வேயைச் சேர்ந்த ஆசிரியரும் அமைதி ஆர்வலர்

லூயிஸ் கெய்ல்ஹாவ் (Louise Keilhau ) (1860-1927) நோர்வேயைச் சேர்ந்த ஆசிரியரும் அமைதி ஆர்வலருமாவார். [1] இவர் நிரந்தர அமைதிக்கான நோர்வே குழுவை நிறுவினார். மேலும், அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார்.

லூயிஸ் கெய்ல்ஹாவ்
1915 இல் ஹாக்கில் லூயிஸ் கெய்ல்ஹாவ்
பிறப்புலூயிஸ் ஒட்டெசென்
1860
இறப்பு1927
தேசியம்நார்வேயைச் சேர்ந்தசர்
பணிஆசிரியர்
அறியப்படுவதுஅமைதி ஆர்வலர்
பிள்ளைகள்வில்ஹெல்ம் கெய்ல்ஹாவ்

வாழ்க்கை

தொகு
 
1915 இல் பெண்கள் சர்வதேச மாநாட்டில்இடமிருந்து வலமாக:1. லூசி தூமையன் - ஆர்மீனியா, 2. லியோபோல்டின் குல்கா, 3. லாரா ஹியூஸ் - கனடா, 4. ரோசிகா ஸ்விம்மர் - ஹங்கேரி, 5. அனிகா ஆக்ஸ்பர்க் - ஜெர்மனி, 6. ஜேன் ஆடம்ஸ் - அமெரிக்கா, 7. யூஜெனி ஹானர், 8. அலெட்டா ஜேக்கப்ஸ் - நெதர்லாந்து, 9. கிறிஸ்டல் மேக்மில்லன் - யுகே, 10. ரோசா ஜெனோனி - இத்தாலி, 11. அன்னா க்ளெமன் - ஸ்வீடன், 12. தோரா தகார்ட் - டென்மார்க், 13. லூயிஸ் கெயிகாவ் - நார்வே

நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர் வரப்போகிறது என்பதை கெய்ல்ஹாவ் உணர்ந்தார். மேலும் இவர் தயாராக இருக்க சர்வதேச அளவில் பயணம் செய்தார்.[2]

முதல் உலகப் போரின் போது துன்பத்திலிருந்து விடுபட நார்வேயின் செஞ்சிலுவைச் சங்கத்தை ஊக்குவித்ததற்காக கெய்ல்ஹாவ் புகழ் பெற்றார். செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒரே பெண்மணி இவர் மட்டுமே. மற்ற பெண்களின் ஆதரவுடன், நார்வே செஞ்சிலுவைச் சங்கத்தை அதன் உள்நாட்டுப் பிரச்சனைகளில் இருந்து பார்க்க ஊக்குவித்தார். [2]

1915 இல் ஹாக்கில் நடந்த அமைதி மாநாட்டிற்கு நார்வே பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். இருப்பினும் பலர் கலந்துகொள்வதில் சிரமங்கள் இருந்தன. ஏனெனில் சமாதான முயற்சிகள் பெண்கள் "மட்டும்" மற்றும் எதிர்ப்புகள் பயணத்தை கடினமாக்கியது. [3] மாநாட்டில், இவர் தீர்மானம் 28 ஐ முன்மொழிந்தார். "நாங்கள் சர்வதேச மாநாட்டில் கூடியிருக்கிறோம், போரின் பைத்தியக்காரத்தனம் மற்றும் பயங்கரத்திற்கு எதிராக போராடுகிறோம், இது மனித உயிர்களின் பொறுப்பற்ற தியாகம் மற்றும் மனிதகுலம் பல நூற்றாண்டுகளாக உழைத்த பல அழிவுகளை உள்ளடக்கியது." [4]

இவர் நிரந்தர அமைதிக்கான நோர்வே குழுவை நிறுவினார். மேலும் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். [4]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் பொருளாதார வல்லுனரும் வரலாற்றாசிரியருமான வில்ஹெல்ம் கெய்ல்ஹா என்பவரின் தாயார் ஆவார். [5]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "13. Louise Keilhau 1860 – 1927" (PDF). Wilpf.org. Archived from the original (PDF) on 6 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Humanitarianism (Norway) | International Encyclopedia of the First World War (WW1)". Encyclopedia.1914-1918-online.net. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  3. Agenda Setting, the UN, and NGOs: Gender Violence and Reproductive Rights.
  4. 4.0 4.1 "Louise Keilhau". Women In Peace (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
  5. "Wilhelm Keilhau".. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_கெய்ல்ஹாவ்&oldid=3670183" இலிருந்து மீள்விக்கப்பட்டது