லூயிஸ் ஹாம்மெட்

லூயிஸ் பிளாக் ஹாம்மெட் (Louis Plack Hammett: ஏப்ரல் 7, 1894 – பிப்ரவரி 9, 1987)) ஐக்கிய அமெரிக்க வேதியியலாளர். ஹாம்மேட் சமன்பாட்டிற்காக அறியப்படுபவர். கரிம வேதியியலில் ஒருங்கிணைந்த பகுப்பாய்வுக்கு அடித்தளம் அமைத்தவர். 1961 இல் 'பிரீஸ்ட்லீ பதக்கம்' பெற்றவர். 'கர்டின்-ஹாம்மெட் விதிகள்'(Curtin–Hammett principle) இவர் பெயரால் வழங்கப்படுகிறது. போர்ட்லாந்து என்ற இடத்தில் தனது இளமையைக் கழித்த இவர் சுவிட்சர்லாந்து மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். தனது முனைவர் பட்ட ஆய்வை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். கரிம வேதியியல் பற்றிய 'ஃபிசிக்கல் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி' என்ற நூலை எழுதினார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Hammett, Louis P. (1940) Physical Organic Chemistry New York: McGraw Hill.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_ஹாம்மெட்&oldid=3362056" இலிருந்து மீள்விக்கப்பட்டது