லூயி பால் கையேட்டே

(லூயி பால் காயில்டேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லூயி பால் கையேட்டே (Louis-Paul Cailletet, 21 செப்டம்பர் 1832 - 5 சனவரி 1913) என்பவர் பிரான்சைச் சேர்ந்த இயற்பியலாளரும், கண்டுபிடிப்பாளரும் ஆவார்.

லூயி பால் கையேட்டே
Louis Paul Cailletet
லூயி பால் கையேட்டே
பிறப்பு(1832-09-21)செப்டம்பர் 21, 1832
சாட்டிலோன், பிரான்சு
இறப்புசனவரி 5, 1913(1913-01-05) (அகவை 80)
தேசியம்பிரான்சு
துறைஇயற்பியல்
அறியப்படுவதுவளிமங்களைத் திரவமாக்கல்
விருதுகள்டேவி விருது (1878)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சாட்டிலோன் என்ற நகரில் பிறந்த கையேட்டே பாரிசில் கல்வி கற்று, தந்தையின் இரும்புத்தொழிலைக் கவனிப்பதற்காக ஊர் திரும்பினார். பகுதியாகக் காய்ச்சி வடித்த இரும்புத்துண்டுகளை பதனிடுகையில் ஏற்படும் விபத்துகளைப் பற்றி ஆராயும் போது, இரும்பை சூடாக்கும் போது அது உயர்ந்த உறுதியற்ற தன்மையைக் கொண்டிருப்பதும், வாயுக்கள் கரைந்திருப்பதையும் அவர் கண்டறிந்தார். பின்னர் அவர் சூளையில் இருந்து வெளிவரும் வாயுக்களை ஆராய்ந்தார். இதன் மூலம் உலோகங்களின் பல்வெறு கட்டங்களிலும் வெப்பம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை அவர் அறிந்தார். இதன் மூலம் அவர் பல்வேறு வாயுக்களையும் திரவமாக்கும் முயற்சியில் இறங்கினார்.

1877 ஆம் ஆண்டில் திரவ ஆக்சிசன் துளிகளை உருவாக்கும் முயற்சியில் கையேட்டே வெற்றி பெற்றார்.[1] இதே காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரவுல் பிக்டே என்பவர் சூல்-தாம்சனின் விளைவைப் பயன்படுத்தி ஆக்சிசனைத் திரவமாக்கினார்.[2]

இதனை விட, கையேட்டே ஈபெல் கோபுரத்தில் 300-மீ/985-அடி உயர அழுத்தமானி ஒன்றைப் பொருத்தினார். கீழே விழும் பொருட்கள் மீதான வளித் தடை பற்றி ஆராய்ந்தார். தானியங்கிப் புகைப்படக்கருவி, உயரமானி போன்ற பல கருவிகளை இவர் வடிவமைத்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Cailletet, L (சூலை 1885). "The Liquefaction Of Oxygen". சயன்சு 6 (128): 51–52. doi:10.1126/science.ns-6.128.51. பப்மெட்:17806947. Bibcode: 1885Sci.....6...51C. 
  2. For biographical and scientific details, see Sloan, T. O'Connor (1920). Liquid Air and the Liquefaction of Gases. New York: Norman W. Henley. pp. 173–202.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயி_பால்_கையேட்டே&oldid=1700178" இலிருந்து மீள்விக்கப்பட்டது