லூர்துகிரி

லூர்துகிரி (Lourdugiri) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்திலுள்ள இடைக்கோடு பேரூராட்சியில் அமைந்த சிற்றூர்.

அறிமுகம் தொகு

குழித்துறையிலிருந்து அருமனை செல்லும் சாலையிலுள்ள உத்திரங்கோடு சந்திப்பிலிருந்து மஞ்சாலுமூடு செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. இப்பகுதி ஒரு சிறிய குன்று ஆகும்.

லூர்துகிரி என்பது கோட்டாறு மறைமாவட்டததிற்கு உட்பட்ட ஒரு கத்தோலிக்க பங்கின் பெயராகும். இங்கு தூய லூர்து அன்னை கோயில் அமைந்துள்ளதால் இது லூர்துகிரி எனப்பட்டது. கிரி என்பது பாறைப்பகுதியைக் குறிப்பிடும் சொல். தூய லூர்து அன்னை கொலு வீற்றிருந்து அருள்பாலிக்கும் குன்று என்று பொருள் கொள்ளலாம்.

மஞ்சாலுமூடு, முதப்பன்கோடு, உத்திரங்கோடு, அண்டுகோடு, பிலாவிளை போன்றவை இதன் அருகமைந்த ஊர்களாகும்.

சமூக நிலை தொகு

லூர்துகிரி பங்கில் சரியாக 450 கத்தோலிக்கக் குடும்பங்கள் உள்ளன. இப்பங்கிற்கு உட்பட்ட பகுதியில் இப்பங்கிற்கு உட்படாத சிரியன்கத்தோலிக்க, பிற கிறித்தவசபை மற்றும் பிற சமய குடும்பங்கள் சுமார் 1000 உள்ளன. இவர்கள் பல சாதிப் பிரிவுகளைச் சார்ந்தவர்களாவும் உள்ளனர். எனினும் மக்கள் இங்கு நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். மக்கள் சபை மாறி திருமணம் செய்வது பரவலாக இருந்தாலும் சாதி மாறி திருமணம் செய்வது அரிதாகவே உள்ளது. தமிழ்நாடு-கேரளம் எல்லைக்கு அருகில் இந்த ஊர் அமைந்துள்ளதால் பேச்சு வழக்கில் மலையாள மொழிக்கலப்பு அதிகமாகவே இருக்கிறது.

கல்வி நிலை தொகு

இப்பகுதியிலுள்ள மக்கள் பெரும்பாலும் பள்ளிப்பருவத்தோடு தங்கள் கல்வியை முடித்துக்கொண்டவர்கள். இன்றைய தலைமுறை கல்வியின் சிறப்பை உணர்ந்துள்ளது என்று கூறலாம். இப்போது உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. குறிப்பாக, தொழிற்கல்வியில் நாட்டம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேனிலைப் பள்ளியும், பல ஆங்கில வழி பள்ளிக்கூடங்களும் உள்ளன. லூர்துகிரியில் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டு இடைக்காலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாணவமாணவியர் தொலைவிலுள்ள பள்ளிகளுக்கும் சென்று படிக்கின்றனர்.

பொருளாதாரம் தொகு

இப்பகுதியைச் சார்ந்தவர்கள் தாழ்நிலை நடுத்தர வர்க்கத்தை (Lower Middle Class) சேர்ந்தவர்கள். எனினும் மிக கணிசமான குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். பெரும்பாலான மக்கள் இரப்பர் பால் வெட்டும் தொழிலில் தினக் கூலிப் பணியாளர்களாக உழைக்கின்றனர். கட்டிட பணியாளர்கள், முந்திரி ஆலைப் பணியாளர்கள், தேனி விவசாயிகள், வாகன ஓட்டுநர்கள் போன்றோரும் குறிப்பிடும்படியாக உள்ளனர். அரசு பணி செய்வோர் உண்டு என்றாலும் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்றே கூறலாம்.

திருக்கோயில் தொகு

லூர்துகிரி குன்றில் உச்சியில் கவின் மிகு லூர்து அன்னை கோயில் அமைந்துள்ளது. இச்சுற்றுவட்டாரத்திலேயே முதன்முதல் அமைந்த கிறித்தவ கோயில் இதுவாகும். இது 1938 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டு 12.08.1998 இல் மறுஅர்ச்சிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது இது சிலுவை வடிவில் அமைந்துள்ளது. கோயிலின் தெற்கு புற கோபுரம் 1998 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கோயிலின் சுவர்கள் அனைத்தும் கருங்கற்களால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகம் மற்றும் அமைப்புகள் தொகு

கோட்டாறு மறைமாவட்டத்திற்கு உட்பட்டு பங்கு அருட்பணிப் பேரவை பங்குத் தந்தையின் தலைமையில் பங்கை நிர்வகித்து வருகிறது. பதினொரு அன்பியங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களும், சபைகள் இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்குத்தந்தையால் நியமிக்கப்பட்டவர்களும் இப்பேரவையில் இடம் பெறுவர்.

நிறுவனங்கள் தொகு

24.07.1983 இல் கைத்தறி கூடம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. தற்போது இப்பணி நடைபெறவில்லை, அதற்கான கூடமும் மறைந்து போய்விட்டது. அறிவகம் ஒன்று அமைந்துள்ளது. அன்னை அரங்கம் பொது மற்றும் தனி நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது. பங்கின் எல்லைக்குள் அமைந்துள்ள சீவ சோதி தொழிற்பயிற்சி கூடம் மறைமாவட்ட நேரடி நிர்வாகத்தில் செயல்பட்டுவருகிறது.

வழிபாடுகள் தொகு

மக்கள் வழிபாட்டிலும் செப உணர்விலும் ஆர்வம் மிகுந்தவர்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 08 30 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. இதில் பெரும்பாலும் அனைத்து கத்தோலிக்கர்களும் பங்கேற்கின்றனர். இடைவிடா சகாய அன்னையின் நவநாள் செபமும் திருப்பலியும் புதன் கிழமை மாலை 06.30 க்கு நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு சிறார் திருப்பலி நடைபெறுகிறது. இதில் சுமார் ஐம்பது சிறார்கள் பங்கேற்கிறார்கள். பங்கு குடும்ப விழா லூர்தன்னையின் நாள்படி திருவிழாவை ஒட்டி (பிப்ரவரி 11)ஐந்து நாள்கள் நடைபெறுகின்றது.

அருட்பணியாளர்கள் தொகு

தனிப்பங்கான நாள் முதல் பல அருள் தந்தையர்கள் இங்கு பணியாற்றியுள்ளார்கள். அவர்கள் பின்வருமாறு:

  1. அருட்பணி. அருளப்பன் (22.05.1975 - 18.05.1978)
  2. அருட்பணி. செபாசுடின் (18.05.1078 - 1980)
  3. அருட்பணி. எப்பப்ராசு (1980 - 1981)
  4. அருட்பணி. ஜாண் (1981 - 1982)
  5. அருட்பணி. மார்க் (1982 - 1986)
  6. அருட்பணி. பிரான்சிசு போர்ஜியோ (1986 - 1988)
  7. அருட்பணி. ஜூலியசு (1988 - 1990)
  8. அருட்பணி. சாலமோன் (1990 - 1992)
  9. அருட்பணி. அருள் (1992 - 1996)
  10. அருட்பணி. ஆன்றனி வில்லியம் (1996 - 2000)
  11. அருட்பணி. சூசை ஆன்றனி (2000 - 2001)
  12. அருட்பணி. டேவிட் மைக்கேல் (2001 - 2002)
  13. அருட்பணி. ஒய்சிலின் சேவியர் (2002 - 2005)
  14. அருட்பணி. சந்திர சேகர் (2005 - 2010)
  15. அருட்பணி. ம.சோசப் அருள் ஸ்டாலின் (2010-2015)
  16. அருட்பணி. Cristoper (2015-2017)
  17. அருட்பணி. Sujin (15/05/2017)
முதல் பணியாற்றி வருகிறார்.

guuh

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூர்துகிரி&oldid=2444662" இலிருந்து மீள்விக்கப்பட்டது