லெகோ, (Leco மற்றும் Leko) ஓர் தனித்த மொழியாகும். வெகுகாலமாகவே அழிந்த நிலையில் உள்ளதாக கருதப்பட்ட இந்த மொழியை பொலிவியாவின் தித்திகாக்கா ஏரியின் கிழக்கில் ஏறத்தாழ 20–40 பேர் பேசி வருகின்றனர். லெகோ மொழியினத்தவர்களின் மக்கள்தொகை 80 என மதிப்பிடப்பட்டுள்ளது.

லெகோ
லெகோ, றிகா
நாடு(கள்)பொலிவியா
பிராந்தியம்தித்திகாக்கா ஏரியின் கிழக்கே
இனம்2,800 (2001)[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20  (2001)[1]
தனி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3lec
மொழிக் குறிப்புleco1242[2]

வரலாறு

தொகு

சிலச் சொற்களடங்கிய பட்டியல்கள் கிடைக்கப்பெற்றாலும் 19ஆவது நூற்றாண்டின் துவக்கத்தில் ஆந்த்ரே எர்ரேரோ என்ற கிறித்தவப் பாதிரியார் தொகுத்த கிறித்தவ நூல் முதன்மையான லெகோ மொழி ஆவணமாக விளங்குகின்றது. இந்த நூல் 1905இல் லபோன் குவெடோவால் வெளியிப்பட்டது. அவர் இந்த நூலைப் பயன்படுத்தி மொழியின் இலக்கணத்தை வரையறுத்தார். 1994இல் சைமன் வான் டெ கெர்கே என் மொழியியலாளர் இந்த மொழி பேசும் சிலரைக் கண்டறிந்து குவெடோவின் இலக்கணப் பகுப்பாய்விற்கு கூடுதலாக சில தகவல்களைத் தொகுத்தார்.

பயன்பாடும் விவரிப்பும்

தொகு

லெகோ எதனையும் தாய்மொழியாக கொண்டிராத ஓர் தனித்த மொழியாகவும் அழிபட்ட மொழியாகவும் 1988இல் வகைபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மொன்டானோ அரகோன் (1987) இந்த மொழி பேசும் சிலரை அதென் பகுதியிலும் லா பாஸ் மாவட்டத்தில் அப்பல்லோ நகரிலும் மாபிரி ஆற்றோரம் கண்டறிந்துள்ளார்.

இம்மொழி பேசும் சிலரை வான் டெ கெர்கே 1994–97 காலப்பகுதியில் குடிபெயரச் செய்தார். பெரும்பாலும் ஆடவராகவும் 50 அகவைக்கு மூத்தவர்களாகவும் இருந்த இவர்கள் இந்த மொழியை வெகுகாலமாக பயன்படுத்தாது இருந்தவர்கள்; இயற்கையாக லெகோ மொழி பேச இவர்கள் மிகவும் தயங்குகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 லெகோ at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Leco". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெகோ_மொழி&oldid=3767629" இலிருந்து மீள்விக்கப்பட்டது