லெக்டின்கள் (Lectin) கார்போஹைட்ரேட்டுகளோடு பிணையும் புரதங்கள்.[1] இயற்கையில் எல்லா உயிரினங்களிலும் லெக்டின்கள் காணப்படுகின்றன. ஒரு செல்லுக்கும் மற்றொரு செல்லுக்கும் இடையிலான தொடர்பாடலில் லெக்டின்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

லெக்டின்கள் அவை பிணையும் கார்போஹைட்ரேட்டைப் பொருத்த அளவில் தனித்துவம் உடையவை. மானோசு பிணையும் லெக்டின் மானோசு-6-பாசுஃபேட்டை அடையாளம் கண்டு பிணையக் கூடியது.

சோயாபீன்சு போன்ற லெகூம் தாவர விதைகளில் அதிக அளவில் லெக்டின்கள் காணப்படுகின்றன. இவற்றைச் சமைக்கும் போது லெக்டின்களின் கார்போஹைட்ரேட்டுகளுடன் பிணையும் திறன் அழிந்து விடுகிறது. சரிவரச் சமைக்காமது இவற்றை உண்பது வயிற்றுக் கோளாறுகளை உண்டாக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.krispin.com/lectin.html லெக்டின் (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெக்டின்&oldid=3984727" இலிருந்து மீள்விக்கப்பட்டது