லெசிம் நடனம்
லெசிம் (லெஜிம்) அல்லது லாசியம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடன வடிவமாகும். [1]சில சமயங்களில் "லெசியம்" என்றும் உச்சரிக்கப்படும்.
லெசிம் நடனக் கலைஞர்கள் லெசிம் அல்லது லெசியம் என்று அழைக்கப்படும் சங்கொலி எழுப்பும் சலங்கைகளைக் கொண்ட ஒரு சிறிய இசைக்கருவியை வைத்திருப்பார்கள். அந்தக் கருவுயின் பெயரே இந்நடன வடிவத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. லெசிமில் குறைந்தது 20 நடனக் கலைஞர்கள் உள்ளனர். நடனம் ஆடும்போது இவ்விசைக்கருவியினை இசத்துக்கொண்டே நடனமாடுகிறார்கள். தோல்கி, ஒரு பறைக் கருவி முக்கிய தாள இசைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது வண்ணமயமான ஆடைகளை அணிந்துகொண்டு நிகழ்த்தப்படுகிறது. [2] மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள், இராணுவப்பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களால் இந்த நடனம் உடற்பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது பல மிகவும் கடினமான உடற்கட்டமைக்கும் நகர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும். [3]
லெசிம் மிக்ககடினமாது என்பதால், ஒரு நடனத்தைக்காட்டிலும் தீவிரமான உடல் பயிற்சி என்றே கருதப்படுகிறது. நடனமாடுபவர்களின் வடிவங்கள் இரண்டு, நான்கு அல்லது ஒரு வட்டத்தில் கூட இருக்கலாம். வரலாற்று ரீதியாக, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சில கிராமங்களில் லெசிமின் சில வேறுபாடுகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும் இவை இன்று அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மாறுபாட்ட இரும்புச் சங்கிலியுடன் ( தனுஸ்யசாரகி ) 2.5 அடி நீளமுள்ள மூங்கில் கம்பத்தை ( ரீட் ) பயன்படுத்தப்படுகிறது. லெசிம் கனமாக இருந்ததால், நடனத்தை விட உடற்பயிற்சியின் ஒரு அங்கமாகக இது பயன்படுத்தப்பட்டது. இத்தகைய லெசிம்கள் எப்போதும் கையால் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன. [4]
லெசிமின் மற்றொரு மாறுபாடு ( கோயண்டே என்று அழைக்கப்படுகிறது) 15 முதல் 18 அங்குல நீளமுள்ள ஒரு மரக் கம்பத்தைப் பயன்படுத்துகிறது. இதில் இரண்டு முனைகளும் துளைக்கப்படு அதன் வழியாக சுமார் 1 கிலோ எடையுள்ள இரும்புச் சங்கிலி இணைக்கப்பட்டுகிறது. அவற்றில் நான்கு விரல்களும் நன்றாகப் பொருந்துவதற்கேற்ப 6 அங்குல நீளமுள்ள கைச் சங்கிலியும் (சலாய்சாகலி ) இணைக்கப்பட்டுகிறது. [4]
நடனத்தின் கிராமப்புற வடிவம் பொதுவாக இரண்டு வரிசைகளில் லெசிம் நடனக் கலைஞர்களைக் கொண்டுள்ளது. இதில் நடன அடிகள் மீண்டும் மீண்டும் சீறாக ஆடப்படுகின்றன. ஒவ்வொரு சில தாளங்களுக்கும் அடிகள் மாறுகின்றன. இவ்வாறு, ஒரு 5 நிமிட லெசிம் நிகழ்ச்சியானது 25 விதமான படிகளை ஒன்றிணைத்து நடனம் ஆடப்படுகிறது. [4]
மற்ற மாறுபாடுகளில், ஒற்றை வட்ட அமைப்பில் ( நர்தகசமுஹன்னி ) நான்கு வரிசைகளில் லெசிம் ஆடுவது அல்லது செறிவான வட்ட வடிவங்களில் (சமுஹன்த்யந்த நர்தகம் ) ( கர்பா நடனத்தைப் போன்றது) ஆடுவது, ஒவ்வொரு நடனக் கலைஞரும் சுழன்று எதிரெதிர் வரிசைகளின் நடனக் கலைஞர்கள் ஒவ்வொருவருடனும் அடிக்கடி லெசிம் விளையாடுவது ஆகியவை அடங்கும். அடிகளில் மாற்றங்கள் ஒரு விசில் மூலம் ஒரு வளையத் தலைவரால் அறிவிக்கப்படும். [5]
கிராமப்புற மகாராஷ்டிராவில் லெசிம் மிகப் பிரபலமானது. இது பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியின் போதும் , கிராம ஜாத்ராக்களின் போதும் (மத ஊர்வலங்கள்) பள்ளிகளில் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாகவும் விளையாடப்படுகிறது. [5]
லெசிமில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன -
- இராணுவ லெசிம் (பரோடாவில் பிரபலமானது; பெரும்பாலும் தற்காப்புக் கலையாகப் பயன்படுத்தப்படுகிறது),
- தலதேக்யா மற்றும்
- சமன்யஜனன்னா.
சர்வதேச பார்வையாளர்களுக்கு முதல் லெசிம் நிகழ்ச்சி ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (1982, டெல்லியில்) நிகழ்த்திக்கட்டப்பட்டது. இதில் 400 சிறந்த மகாராஷ்டிர லெசிம் வீரர்கள் கலந்துகொண்டு லெசிமைச் செய்தனர். [4]
லெசிம் நடனத்தின் கூறுகளின் உள்ளூர் பெயர்கள் [5]
- லெசிம் - தொடன்னா பந்தலேலி என்ற தோராயமாக ஒன்றரை அங்குல மரக் கம்பம் ) மற்றும் அடகவலேலியா எனப்படும் சங்கிலி. சங்கிலிகளை அடிப்பதால் சங்கு போன்ற சத்தம் எழும்புகிறது
- ஹலகி - ஒரு வாத்தியம்
- டிரம் - ஒரு குறுகிய கைப்பறை.
- சங்குகள் - இசை பாசறை வாயுடன் கூடிய தலசராகே போன்றது (பெரியது).
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shobhna Gupta (2002), Dances of India, Har-Anand Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-241-0866-8,
... Lezim is the most common folk dance associated with physical fitness tradition of the region. The pink lezim is a small frame to which metal discs are fixed ...
- ↑ Folk Dances of Western India, Rangashree Dances, பார்க்கப்பட்ட நாள் 2009-07-21,
... The Lezim dance is named for the instrument used in the dance. The lezim is made of a wooden stick, to which is strung a flexible loop with cymbals or pieces of metal that make a clashing sound ...
- ↑ Kapila Vatsyayan (1987), Traditions of Indian folk dance, Clarion Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85120-22-6,
... part and parcel of physical education drill in all schools and colleges ... Lezim is as much a vigorous physical exercise and drill as a dance; the formations are in twos and fours and sometimes even a circle ...
- ↑ 4.0 4.1 4.2 4.3 Agarkar, A.J. (1 January 1950). FOLK-DANCE OF MAHARASHTRA.Agarkar, A.J. (1 January 1950). FOLK-DANCE OF MAHARASHTRA (1st ed.). Bombay, India: Rajabbau.
- ↑ 5.0 5.1 5.2 Schultz, Anna (13 December 2012). Singing a Hindu Nation: Marathi Devotional Performance and Nationalism.Schultz, Anna (13 December 2012). Singing a Hindu Nation: Marathi Devotional Performance and Nationalism (1st ed.). Oxford university press. ISBN 978-0199730834.