லெசுட்டர் ஆண்ட்ரூசு

அமெரிக்க வேதியியலாளர்

வில்லியம் லெசுட்டர் செல்ப் ஆண்ட்ரூசு (William Lester Self Andrews) என்பவர் ஓர் அமெரிக்க வேதியியலாளர் ஆவார். வளர்ந்து வரும் உலோக ஒருங்கிணைப்பு சேர்மங்களின் குவாண்டம் வேதியியல் துறையில் இவரது பங்களிப்புகள் உள்ளன. வர்கினியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வில்லியம் ஓய்வு பெற்றார். 2010 ஆம் ஆண்டு மூலக்கூற்று நிறமாலையியல் துறையில் இயர்ல் கே பிளையர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தாழ்வெப்பப் பொருள்களில் அதிர்வு நிறமாலையுடன் குவாண்டம் கணக்கீடுகள் இணைப்பு குறித்து இவருடைய ஆய்வுகள் இருந்தன. பல மூலக்கூறுகள், அயனிகள் மற்றும் அணைவுகளை அடையாளம் காண இவரது கண்டுபிடிப்பு பேருதவி புரிந்தது [1].

லெசுட்டர் ஆண்ட்ரூசு
Lester Andrews
பிறப்புசனவரி 31, 1942 (1942-01-31) (அகவை 82)
அமெரிக்கா, வடக்கு கரோலினா, லிங்கல்டன்
துறைஒளிவேதியியல்
பணியிடங்கள்வர்கினியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மிசிசிபி மாநிலப் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம்
ஆய்வேடுஇலித்தியம் அணுக்கள் மந்தவாயு அணித்தொகுதிகளில் வினை தொடர்பான ஆய்வுகள் (1966)

வட கரோலினாவின் லிங்கன்டன் நகரத்தில் வில்லியம் பிறந்தார். 1963 ஆம் ஆண்டு மிசிசிபி மாநில பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் படிப்பில் முதலாவது பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தை 1966 ஆம் ஆண்டு பெர்க்லியில் இயற்பிய வேதியியலில் பெற்றார்.

2007 ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்ட பாதரச டெட்ராபுளோரைடின் கட்டமைப்பு. HgF4 சேர்மத்திற்கான முதலாவது ஆதாரம், பேராசிரியர் ஆண்ட்ரூசு இணைந்து உருவாக்கியது[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 2010 Earle K. Plyler Prize for Molecular Spectroscopy & Dynamics Recipient, American Physical Society
  2. X. Wang; L. Andrews; S. Riedel; M. Kaupp (2007), "Mercury is a Transition Metal: The First Experimental Evidence for HgF4", Angew. Chem. Int. Ed. (46): 8371–8375, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/anie.200703710, PMID 17899620

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெசுட்டர்_ஆண்ட்ரூசு&oldid=4040390" இலிருந்து மீள்விக்கப்பட்டது