லெசூலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Cercopithecidae
பேரினம்:
Cercopithecus
இனம்:
C. lomamiensis
இருசொற் பெயரீடு
Cercopithecus lomamiensis
Hart et al., 2012

லெசூலா (Cercopithecus lomamiensis) கொங்கோ நாட்டில் லொமாமி பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழைய குரங்கினம் ஆகும். இது 2007 இல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2012 ல் பதிப்புமூலம் உறுதிசெய்யப்பட்டது. லெசூலா 1984க்குப் பின் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட இரண்டாவது புதிய குரங்கினமாகும்.[1][2]

லெசூலா கொங்கோவின் மழைக்காடுகளில் வாழ்ந்ததற்கான 2007 மாதிரி அடையாளங்கள் கொங்கோவின் ஒபலா கிராமத்தில் கண்டறியப்பட்டன. அத்துடன் அவை காடுகளிலும் அவதானிக்கப்பட்டன. இது நாட்டின் நடுப்பகுதியில் உள்ள லொமாமி ஆற்றிலிருந்து சுவாப்பா ஆறு வரையான பகுதியாகும்.[3]

இவ் இனத்தைச் சேர்ந்த குரங்கொன்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஆய்வாளர்களின் கண்ணில் பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கொங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரபணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கினமானது , விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை உறுதிசெய்துள்ளனர்.

கொங்கோவின் மையப்பகுதியில் உள்ள மழைக்காடுகளில் இக்குரங்கினமானது அதிகமாக வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்குரங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாகவும் இதனால் இவ்வினம் வேகமாக அழியக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

'லெசூலா' குரங்குகளானவை 'சேர்கோபிதகஸ் ஹம்லைனி' (Cercopithecus hamlyni) என்றழைக்கப்படும் ஆந்தை முகக் குரங்குகளின் முகத்தோற்றத்தினை ஒத்ததாகக் காணப்படுகின்ற போதிலும் இவை அவற்றிலிருந்து வேறுபட்டதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆபிரிக்காவில் கடந்த 28 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 2 ஆவது புதிய குரங்கினம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

தொகு
  1. John A. Hart, Kate M. Detwiler, Christopher C. Gilbert, Andrew S. Burrell, James L. Fuller, Maurice Emetshu, Terese B. Hart, Ashley Vosper, Eric J. Sargis & Anthony J. Tosi (2012). "Lesula: A new species of Cercopithecus monkey endemic to the Democratic Republic of Congo and implications for conservation of Congo's central basin". PLoS ONE 7 (9): e44271. doi:10.1371/journal.pone.0044271. 
  2. Ella Davies (September 13, 2012). "New monkey identified in Africa". BBC News. http://www.bbc.co.uk/nature/19556915. பார்த்த நாள்: September 13, 2012. 
  3. David Braun (September 13, 2012). "New Monkey Discovered in the Congo". National Geographic. http://newswatch.nationalgeographic.com/2012/09/13/new-monkey-discovered-in-the-congo/. பார்த்த நாள்: September 13, 2012. 

பதிப்பீடு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெசூலா&oldid=4175516" இலிருந்து மீள்விக்கப்பட்டது