பால்மானி

(லேக்டோமீட்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பால்மானி (Lactometer) என்பது பாலின் அடர்த்தியினைக் காணப் பயன்படும் ஒரு கருவியாகும். விட்டம் குறைந்த (3 மி.மீ )ஒரு மெல்லிய குழாய் உள்ளது. இதன் மேல் பகுதி மூடப்பட்டுள்ளது. அடியில் சற்று அதிக விட்டமும் குறைந்த நீளமும் உடைய ஒரு பகுதியுள்ளது. இதன் அடிப்பகுதியில் பாதரசம் அல்லது ஈயக்குண்டுகளால் நிரப்பப்பட்ட ஒரு சிறிய பகுதியும் உள்ளது. இந்த அமைப்பு நீர்மங்களில் இது செங்குத்தாக மிதக்க உதவுகிறது. பொருட்களின் மிதத்தல் விதியினை அடிப்படையாகக் கொண்டு இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுகிய விட்டமுள்ள பகுதியில் அடர்த்தியினைக் காட்ட உதவும் அளவுகள் கொண்ட தாள் ஒட்டப்பட்டுள்ளது.[1]

பால்மானி

தூய நீரில் மூழ்கும் அளவு W என்றும் அதுபோல் தூய நல்ல பாலில் மூழ்கும் அளவு M என்றும் குறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு அளவுகளுக்கும் இடையே சில அளவுகள் இருக்கும். பாலில் கலந்துள்ள நீரின் அளவைப் பொருத்திருக்கிறது. பொதுவாகப் பால் பண்ணைகளில் இக்கருவி பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Lactometer". www.neha.org. Archived from the original on 2022-08-08. பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்மானி&oldid=3610169" இலிருந்து மீள்விக்கப்பட்டது