லேடி மேக்பத் (கதாபாத்திரம்)

சீமாட்டி மேக்பத் சேக்ஸ்பியரின் ‘மேக்பத்’ எனும் நாடகத்தின் முத்ன்மைக் கதாபாத்திரம் ஆகும். பெண் கதாபாத்திரங்களில் மிகவும் பெயர்பெற்ற ஒரு கதாபாத்திரம் ஆகும். ஒரு பட்டத்தரசி ஆவதே லேடி மேக்பதின் இலக்கு. இந்த இலக்கு தன்னையும் தன் கணவரையும் பாவத்தின் உள்ளே அழைத்து செல்கிறது. அவளது தீராத ஆசையே இசுக்காட்லாந்து அரசரை கொலை செய்யத் தூண்டுகிறது. கடைசியில் இந்த ஆசை அவரை பெரும் அவலத்துக்குக் கொண்டு செல்கிறது. எவ்வளவு கழுவினாலும் தன் கையில் உள்ள குருதிக்கறை போகாததை அவா் உணா்கிறார். தன் பாவத்தின் சம்பளம் சாவாகிறது.

சான்றுகள்:

Holinshed's Chronicles, Volume V: Scotland, page 269 Macbeth, Act 5, Scene 8, Line 71. Macbeth, Act 5, Scene 1. A.C. Bradley. Shakespearean Tragedy. Palgrave Macmillan; 4th edition, 2007.