லேபட்சி
லேபட்சி (Lepakshi) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது இந்துப்பூருக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூருக்கு வடக்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. விசயநகர அரசர்கள் கி.பி.1400-1600 ஆண்டுகளில் அம்பியில் அரசாண்ட கொண்டிருந்தபோது இது ஒரு புண்ணியத்தலமாக இருந்தது.
இலேபட்சி | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | அனந்தபூர் |
பெயர் காரணம்
தொகுஇந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பறவையான சடாயு இராமனின் மனைவியான சீதையை இராவணன் தூக்கிச் செல்லும்போது வழிமறித்ததாகவும், அப்போது இராவணன் சடாவுவின் இறக்கையைவெட்டி வீழ்த்தியதாகவும் இராமாயணக் கதையில் கூறப்படுகிறது. அப்போது அங்குவந்த ராமன் சடாயுவின் நிலைகண்டு எழுந்திருக்கும்படி பறவையிடம் சொன்னதாக வரலாறு கூறுகிறது. தெலுங்கில் லே என்றால் எழுந்திரு என்றும், பட்சி என்றால் பறவை என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த ஊருக்கு லேபட்சி என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
வீரபத்திரர் கோவில்
தொகுஇதில் வீரபத்திரன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலினுள் சிவன், திருமால், வீரபத்திரர் ஆகியோருக்குச் சிறு கோயில்கள் உள்ளன. சிவனும் திருமாலும் எதிரெதிராக இருக்கின்றனர். இந்தக் கோயிலின் கலைநயம் மிகுந்த பகுதி நாட்டிய மண்டபமாகும். அதில் நட்டியக்காரர், மிருதங்கம் வாசிப்போர், இசைவாணர் ஆகியோருடைய உருவங்கள் செதுக்கிய 60 பெரிய தூண்களும் ஓவிய வேலைப்பாடு மிகுந்த விதானமும் காணப்படுகின்றன. கருவறையின் சுவர்களிலும் கூரை உட்பறமும் அழகுமிக்க ஓவியங்கள் நிறைந்துள்ளன.
நந்தி
தொகுஇங்குள்ள வீரபத்திரர் கோயிலிலிருந்து சிறிய தூரத்தில் கல்லால் செதுக்கப்பட்ட படுத்திருக்கும் நிலையில் நந்தி ஒன்றுள்ளது. இந்த நந்தி 15 அடி நீளம், 27 அடி உயரம் கொண்டு ஆந்திரத்தில் உள்ள நந்திகளில் மிகப்பெரியதாக உள்ளது.[1] இந்த நந்தி 16-ம் நூற்றாண்டில் செய்யப் பெற்றதாகும். அதை ‘பசவண்ணர்’ என்னும் நந்தி என்று வணங்கி வருகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ வி. மகேஸ்வரி (20 சூன் 2018). "நலம் தரும் நந்தி ஆலயங்கள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2018.
உசாத்துணை
தொகு- "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
- http://www.censusindia.gov.in/(S(zglqf2554sc5wi55225ilzut))/pca/SearchDetails.aspx?Id=636373
- http://censusindia.gov.in/2011census/maps/atlas/28part32.pdf
- http://www.anantapur.com/travel/lepakshi.html