லே மேயூர் அருங்காட்சியகம், பாலி
லே மேயூர் அருங்காட்சியகம் (Le Mayeur Museum) இந்தோனேசியாவின் பாலியில், சனூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகமாகும்.இன்னா கிராண்ட் பாலி பீச் ஓட்டலுக்கும் ஜலான் ஹாங் துவாவுக்கும் இடையில் இந்த அற்புதமான லே மேயூர் அருங்காட்சியகம் உள்ளது. பாலி நகரில் உள்ள சிந்தூமில் உள்ள சனூரின் கடற்கரை ஓரத்தில் இதனைக் காணலாம். இங்கு நினைவுப் பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகளை விற்கின்ற கடைகள் வரிசையாக அமைந்துள்ளன.
லே மேயூர் வாழ்க்கை
தொகுகவர்ச்சிகரமான லே மேயூர் அருங்காட்சியகம் சனூரில் உள்ள முதல் அருங்காட்சியகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இங்கு அட்ரியன்-ஜீன் லே மேயூர் டி மெர்பிரெஸின் படைப்புகள் மற்றும் பாலியின் பாரம்பரிய கலைப் பொருள்களும் உள்ளூர் கலைப்பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை அவர் இங்கு தங்கியிருந்தபோது சேகரித்ததாகும். லே மேயூர் தனது ஓவியங்களின் தளமாக அனைத்து வகையான பொருட்களையும் பயன்படுத்தி உள்ளார். அவற்றில் மரம், கேன்வாஸ், காகிதம், அட்டை மற்றும் ஒட்டு பலகை உள்ளிட்ட அனைத்தும் அடங்கும். புகழ்பெற்ற இந்த அருங்காட்சியகத்தில் பாலினீய கலாச்சாரம் மற்றும் அதன் கலை வரலாற்றை வெளிப்படுத்தும் கலைப்பொருள்கள் காட்சிப்படத்தப்பட்டுள்ளன. ஆண்டு முழுவதும் அருகிலுள்ள மற்றும் தொலைதூர இடங்களிலிருந்து ஏராளமான கலை ஆர்வலர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து இங்குள்ள பொருள்களை பார்வையிட்டுச் செல்கின்றனர். லே மேயூரின் தனிப்பட்ட வரலாறு மற்றும் லே மேயரின் கலைப்படைப்புகளைக் கொண்டு அமைந்துள்ள, இந்த வசீகரிக்கும் லே மேயூர் அருங்காட்சியகம் முன்னர் மேற்கூறிய ஓவியர் மற்றும் அவரது மனைவியின் மாளிகையாக இருந்தது. பிரஸ்ஸல்ஸில் பிறந்த லே மேயூர் 1920 களில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் ஆவார். இக்காலகட்டம் அவரது சுற்றுப்பயணத்திலேயே கழிந்ததாகும். அவர் 1932 ஆம் ஆண்டில் பாலிக்குத் திரும்பி வந்தபோது, அதன் அழகுக்கு அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவ்வாறு ஈர்க்கப்பட்டதும் அங்கு அவர் குடியேற முடிவு செய்தார். டென்பசருக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கே கிளாண்டிஸ் என்னும் கிராமத்தில் குடிபுகுந்தார். அந்த சிறிய கிராமத்தில் வசித்து வந்த காலத்தில் அவர், மிகப் புகழ்பெற்ற பாரம்பரிய லெகாங் நடனக் கலைஞரான நி பொல்லோக் என்பவரைச் சந்தித்தார். அவரைச் சந்தித்தபோது அவருக்கு பதினைந்து வயதுதான் ஆகியிருந்தது. அந்த சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், அவள் அவருடைய ரசிகராக மாறினாள். உண்மையில் சொல்லப்போனால், அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள லே மேயரின் பல ஓவியங்கள் அவளுடைய உருவப்படங்களே ஆகும்.[1]
காட்சிப்பொருள்கள்
தொகுகவர்ச்சிகரமான லே மேயூர் அருங்காட்சியகத்தில் எண்பது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு ஊடகங்களில் உருவாக்கப்பட்டவை ஆகும். முதன்மைக் கட்டிடத்தில் பல செவ்வியல் பாலினியக் கலைக்கூறுகள் காட்சியில் உள்ளன. அவற்றுள் சிவப்பு நிற டெர்ராஸோ தரை ஓடுகள் மற்றும் செதுக்கப்பட்ட கல் சுவர்களும் அடங்கும். அருங்காட்சியகத்தின் அலங்காரங்கள் அழகாக செதுக்கப்பட்ட மரத்தால் கொண்டு அமைந்துள்ளன. மேலும் ஜன்னலில், பிரபலமான பலினீஸ் நிழல் பொம்மலாட்டங்களால் ஈர்க்கப்பட்ட வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை பிரசித்தி பெற்ற வேயாங்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஜன்னலை மூடுகின்ற கதவுகளில் இந்து காவியமான ராமாயணத்தின் கதை அற்புத சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு செதுக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய நெய்த இழைகளின் பாலினிய கலைக்கூறுகள் கொண்ட அம்சத்துடன் அலங்கரிக்கப்பட்ட உட்புறத்தினைக் கொண்டு இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இயற்கையான ஒளி வீசுவதைக் காணமுடியும். பிரம்மாண்டமான அருங்காட்சியகத்தின் வழியாக நடந்து செல்லும்போது லே மேயரின் படிப்பு அறைகள் மற்றும் கலை அரங்குகள், படுக்கையறைகள், நீண்ட தாழ்வாரங்கள் மற்றும் குளியலறைகள் போன்றவற்றைக் காண முடியும். அத்துடன் நி பொல்லோக்கின் வேனிட்டி கார்னர் எனப்படும் இடம் மற்றும் அழகான அறைகளை அங்கு காணமுடியும். காணவரும் அனைவரையும் மயக்கும் தன்மை கொண்ட இந்த லே மேயூர் அருங்காட்சியகத்தில் சிக்கலான செதுக்கப்பட்ட அலமாரிகள், ஏராளமான அளவிலான மலர் குவளைகள் மற்றும் நேர்த்தியுடன் செதுக்கப்பட்ட ஒரு பழங்கால எண்கோண தேக்கு மர அமைப்புகள் போன்றவற்றைக் காணலாம். அங்கு பல வகையான வீட்டு பொருட்களும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.[1]
இலக்கியம்
தொகு- Lenzi, Iola (2004). தென்கிழக்கு ஆசியாவின் அருங்காட்சியகங்கள் . சிங்கப்பூர்: தீவுக்கூட்ட பதிப்பகம். ப. 200 பக்கங்கள். ஐஎஸ்பிஎன் Lenzi, Iola (2004). Lenzi, Iola (2004).
வெளி இணைப்புகள்
தொகு- பாலிப்லாக் | லே மேயூர் அருங்காட்சியகம் பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்