லைலா நூர் (Laila Nur)(அக்டோபர் 5, 1934 - மே 31, 2019) என்பவர் வங்காளதேசத்தின் மொழி இயக்க ஆர்வலர் மற்றும் கல்வியாளர் ஆவார்.[1] இவர் கொமிலா விக்டோரியா அரசு கல்லூரியில் முதல் பெண் பேராசிரியையாக 1957-ல் சேர்ந்தார். [2]

லைலா நூர்
Laila Nur
பிறப்பு(1934-10-05)அக்டோபர் 5, 1934
டவுட்கண்டி உபாசிலா, கொமிலா நகரம், பிரித்தானிய இந்தியா (தற்பொழுது வங்காளதேசம்)
இறப்புமே 31, 2019(2019-05-31) (அகவை 84)
கல்விதாக்கா பல்கலைக்கழகம்
பணிபேராசிரியர்
அமைப்பு(கள்)கொமிலா விக்டோரியா அரசுக் கல்லூரி
அரசியல் இயக்கம்வங்காள மொழி இயக்கம்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

லைலா நூர் 1934ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி கொமிலாவில் உள்ள டவுட்கண்டி தானாவில் பிறந்தார். இவரது தந்தை அபு நாசர், ஒரு மருத்துவ மருத்துவர். இவரது தாயார் சம்சுன்னகர் மெகைதி. இவர் 1952-ல் தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெற்றார். தாக்கா பல்கலைக்கழகத்தில் 1956ல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

மொழி இயக்கத்தில் பங்கேற்பு

தொகு

1952-ல் இளம் பெண்ணாக, நூர் வங்காள மொழி இயக்கத்தில் பங்கேற்றார். 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று, அடுத்த நாள் அணிவகுப்பில் பங்கேற்கத் தயாரானதற்காக சுமார் 20 பெண் மாணவர்களுடன் பாக்கித்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். நூர் மொழி இயக்கத்தில் பங்கேற்றதற்காக 21 நாட்கள் சிறையில் இருந்தார்.[2]

தொழில்முறை சாதனைகள்

தொகு

1957ஆம் ஆண்டில், கொமிலா விக்டோரியா அரசு கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி நூர் ஆனார்.[2] திடாசு சௌத்ரியின் 115 கவிதைகளை நூர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டில், மொழி இயக்கம் மற்றும் கல்விக்கான தனது பங்களிப்பிற்காக நூர் பினோய் சொமனோனா விருதைப் பெற்றார்.[3][4]


மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn) இம் மூலத்தில் இருந்து 2019-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190415170617/http://www.ntvbd.com/arts-and-literature/38059/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%82%E0%A6%B0/print. 
  2. 2.0 2.1 2.2 সাক্ষাৎকার (in Bengali). Archived from the original on 26 May 2015. பார்க்கப்பட்ட நாள் 26 May 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn) இம் மூலத்தில் இருந்து 26 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150526172700/http://www.comillarbarta.com/comilla/17439-mnbbou12345678901.html. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn) இம் மூலத்தில் இருந்து 26 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150526170821/http://weeklyamod-bd.com/%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%B2%E0%A6%BE/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைலா_நூர்&oldid=3702656" இலிருந்து மீள்விக்கப்பட்டது