கொமிலா நகரம்

கொமிலா நகரம் (Comilla), அதிகாரப்பூர்வமாக குமிலா என்றழைக்கப்படுகிறது. இது, வங்காளம், டாக்கா-சிட்டகாங் நெடுஞ்சாலையின் மீது அமைந்த சிட்டகாங் பிரிவிலுள்ள ஒரு நகரமாகும் . இது சிட்டகாங் பிரிவின் ஒரு பகுதியான கொமிலா மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். சிட்டகாங்கிற்குப் பிறகு கிழக்கு வங்காளத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் மற்றும் வங்காளத்திலுள்ள மூன்று பழமையான நகரங்களில் ஒன்றாகவும் கொமிலா நகரம் உள்ளது.

வரலாறு தொகு

பண்டைய சகாப்தம் தொகு

கோமிலா பகுதி ஒரு காலத்தில் பண்டைய சமதாதாவின் கீழ் இருந்தது மற்றும் திரிபுரா மாநிலத்துடன் இணைந்தது. இந்த மாவட்டம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் ஹரிகேலா மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. லால்மாய் மைனமதி தேவா வம்சத்தால் (கி.பி எட்டாம் நூற்றாண்டு, கி.பி 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்) ஆளப்பட்டது. 1732 ஆம் ஆண்டில், இது ஜகத் மணிக்யாவின் வங்காள ஆதரவு களத்தின் மையமாக மாறியது.[1]

1764 ஆம் ஆண்டில் திரிபுரா மன்னருக்கு எதிரான விவசாயிகள் இயக்கம், முதலில் ஷம்ஷர் காசியின் தலைமையில் உருவாக்கப்பட்டது, இது கொமிலாவில் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாக உள்ளது.[2] இது 1765 இல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் வந்தது. இந்த மாவட்டம் 1790 இல் திரிபுரா மாவட்டமாக நிறுவப்பட்டது. இது 1960 இல் கொமிலா என மறுபெயரிடப்பட்டது. இந்த மாவட்டத்தின் சந்த்பூர் மற்றும் பிரம்மன்பாரியா துணைப்பிரிவுகள் 1984 இல் மாவட்டங்களாக மாற்றப்பட்டன.

பிரித்தானிய சகாப்தம் தொகு

1905 இல் வங்காளப் பிரிவினையின் போது ஒரு முஸ்லீம் இந்த நகரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டபோது கொமிலாவில் இனவாத பதற்றம் பரவியது. நவம்பர் 21, 1921 அன்று,வேல்ஸ் இளவரசரின் இந்தியா பயணத்தை எதிர்த்து காஜி நஸ்ருல் இஸ்லாம் தேசபக்தி பாடல்களை இயற்றி நகர மக்களை இளவரசருக்கு எதிராக எழுப்ப முயன்றார். இந்த நேரத்தில், ஒரு புரட்சிகர நிறுவனமாக அவே ஆசிரமம் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. அப்போது கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் கொமிலாவுக்கு விஜயம் செய்தனர்.

1931 ஆம் ஆண்டில், சௌதக்ராம் உபசிலாவில் உள்ள மோகினி கிராமத்தில் சுமார் 4000 விவசாயிகள் நில வருவாய் வரிக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். பிரிட்டிஷ் கூர்க்கா வீரர்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஒரு பெரிய விவசாயிகள் கூட்டத்தில், 1932 இல் லக்சம் உபசிலாவின் ஹஸ்னாபாத் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

விக்டோரியா மகாராணியின் நினைவாக இந்த நகரத்தில் உள்ள கல்லூரிக்கு கொமிலா விக்டோரியா அரசு கல்லூரி எனப் பெயரிடப்பட்டது.

வங்காளப் பிரிவினைக்குப் பிறகு தொகு

கொமிலா மக்கள் 1952 இல் மொழி போராளிகளாக பணியாற்றினர். கொமிலா விக்டோரியா கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கொமிலாவைச் சேர்ந்த மொழி இயக்கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக ஷாஹீத் திரேந்திரநாத் தத்தா இருந்தார். ஷிப் நாராயண் தாஸ் வங்காள தேசத்தின் முதல் கொடியின் வடிவமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். அவர் பங்களாதேஷின் விடுதலைப் போரின்போது பி.எல்.எஃப். கொமிலா பிரிவு 2 இல் பணியாற்றியவர்.

முக்கிய இடங்கள் தொகு

கொமிலாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தொல்பொருள் நினைவுச்சின்னங்கள், குறிப்பாக 7 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை, இப்போது மைனமதி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.[3] கொமிலாவில் இரண்டாம் உலகப் போரின் நினைவு போர் கல்லறை உள்ளது, இது காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்தால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

விளையாட்டு தொகு

கொமிலா விக்டோரியன்ஸ் என்பது கொமிலாவை தளமாகக் கொண்ட ஒரு தொழில்முறை துடுப்பாட்ட அணி மற்றும் வங்கதேச பிரீமியர் லீக்கில் இரண்டாவது மிக வெற்றிகரமான கிளப்பாகும்.[4] கொமிலா விக்டோரியன்ஸும் லீக்கில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.[5]

நிர்வாகம் தொகு

கொமிலாவை கொமிலா நகராட்சி கட்டுப்படுத்துகிறது. இதில் 27 பகுதிகள் உள்ளன.[6]

மெட்ரோ சுற்றுப்புறங்கள் தொகு

இவை கொமிலாவின் அருகே அமைந்துள்ள பிற நரங்களாகும்.[7]

  • பாக்மரா
  • பரா பரா
  • பெல்கர்
  • போலின் (வடக்கு)
  • போலின் (தெற்கு)
  • பிஜாய்பூர்
  • சப்பாபூர்
  • துர்லவ்பூர்
  • சௌரா
  • கலியாரா
  • பூர்பா ஜோரேகரன்
  • பச்சிம் ஜோரேகரன்
  • பெருல் (வடக்கு)
  • பெருல் (தெற்கு)

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொமிலா_நகரம்&oldid=3583135" இருந்து மீள்விக்கப்பட்டது