லோக்தாமியா

இராசத்தானிலுள்ள ஒரு இனம்

லோக்தாமியர்கள் என்பது இராஜபுத்திர குலமாகும் [1] 

வரலாறு

தொகு

இவர்கள் ராஜ்நகருக்கு குடிபெயர்ந்து, அப்பகுதியில் உள்ள பல கிராமங்களை ஆக்கிரமித்தனர். [2] 17 ஆம் நூற்றாண்டில், இவர்கள் ராஜ்நகர் கர் என்று அழைக்கப்படும் ஒரு கோட்டையை நிறுவினர். அதன் எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன. தும்ரான் அரசர்கள் உட்பட மற்ற ராஜபுத்திர பரம்பரையினருடன் இவர்கள் பிராந்திய மோதல்களில் ஈடுபட்டனர். [2]

ராஜ்நகர் ஒரு சிறிய தலைமைத்துவமாக வளர்ந்தது. அது பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டது. மேலும், லோக்தாமியா ஜமீந்தார்கள் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தினர். இருப்பினும் ஆங்கிலேயர் காலத்தில், பிற ராஜபுத்திர குலங்கள் மற்றும் அண்டை சாதிகளுடன் ஏற்பட்ட தொடர்ச்சியான மோதல்களால் தங்கள் ஆதிக்கத்தை இழந்தனர். [2]

லோக்தாமியா பாரம்பரியம், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த நான்கு சகோதரர்களுக்கு சமூகத்தின் வம்சாவளியைக் குறிக்கிறது. இருப்பினும் இனவியல் அறிஞர் குமார் சுரேஷ் சிங், லோக்தாமியாக்கள் பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று கருதினார். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Perspectives on Indian Society and History: A Critique.
  2. 2.0 2.1 2.2 Democracy against Development: Lower-Caste Politics and Political Modernity in Postcolonial India.
  3. Muhammad Iftekhar Alam (1991). "Varna, Jati and Jana: An anthropo-historical perspective". Proceedings of the Indian History Congress 52: 122–127. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோக்தாமியா&oldid=3875919" இலிருந்து மீள்விக்கப்பட்டது