லோதி கலை மாவட்டம்

லோதி கலை மாவட்டம் என்பது புது தில்லியின் லோதி காலனியின் அமைதியான சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் கலை அலங்காரங்கள் கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் உள்ள கட்டிடங்களின் வெளிப்புறங்களில் வரையப்பட்ட பெரிய சுவரோவியங்கள் மூலம் தெருக் கலையை இந்திய அளவில் பிரபலப்படுத்தியுள்ளது. [1] [2] [3] [4]

வரலாறு தொகு

தெரு + கலை இந்தியா அறக்கட்டளை (St+art India Foundation) என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், முன்னெடுத்து, லோதா காலனியில் வசிப்பவர்கள், அங்குள்ள குடிமக்கள் அமைப்புகளுடன் இணைந்து , உலகளவில் மற்றும் தேசிய அளவில் பல்வேறு புகழ் பெற்ற கலைஞர்களை கூட்டிவந்து, அங்குள்ல கட்டிடங்களில் ஓவியங்கள், தெரு காட்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் போன்ற பரந்த அளவிலான ஓவியங்கள், வடிவங்கள், மலர் உருவங்கள் போன்றவைகளை சித்தரிக்கும் அற்புதமான தெருக் கலைகளை காலனி முழுவதும் உருவாக்கியுள்ளது.

காலநிலை மாற்றம், பாலினப் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் மாசுபாடு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம், விண்வெளி ஆய்வு போன்ற கருப்பொருள்களைக் கொண்டு இந்த வரைகலைகள் பல்வேறு கலைஞர்களால் வரையப்பட்டுள்ளது

ஓவியங்கள் மற்றும் அதன் படைப்பாளிகள் தொகு

நிஸ்பூன், என்ற போலந்து கலைஞர் உணர்ச்சிமிக்க மற்றும் பெண்பால் மலர் வடிவங்களை உருவாக்கியுள்ளார், மிகவும் ஆற்றல் மிக்கதாகக்காணப்படும் அது பார்ப்பவர்களின் ஆன்மாவை அழைக்கும் வகையில் உள்ளது.

தெருவில் பராத்தா விற்கும் பத்மாவின் உருவப்படம் ஹென்ரிக் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

டாலீஸ்ட் நூற்றுக்கணக்கான பறவைகள் ஒரு மைய திறப்பை நோக்கி சங்கமிக்கும் குழப்பமான கலைக் காட்சியை வரைந்துள்ளார்.

கியா புவி வெப்பமடைதல் விஷயத்தை பற்றி ஆராய்ந்து வரைந்துள்ளார்.

லீஹில், காலநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் மக்கள் தப்பிக்க போராடுவதையும் சித்தரித்து ஒரு கலைப்படைப்பை படைத்துள்ளார்.

ராகேஷ் ஒரு யானைக்கூட்டத்தை கோண்ட் பாணி ஓவியத்துடன் காட்டின் சுற்றுப்புறத்தில் உருவாக்கியுள்ளார்.

ஒரு சிறுகோள் மீது அமர்ந்திருக்கும் விண்வெளி வீரர் நெவர் க்ரூவால் நிதர்சன உருவம் போலவே வரையப்பட்டுள்ளது.

சுய்கோவால் உருவாக்கப்பட்ட தாமரை இந்தியாவின் ஆன்மாவை சுட்டிக்காட்டுகிறது, ஆனால் ஜப்பானிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வெளிப்புற அருங்காட்சியகத்தில் இதுபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட சுவரோவியங்கள் உள்ளன, பார்வையாளர்கள் இதனை எந்த கட்டணமுமின்றி இலவசமாக பார்க்கலாம், இப்பகுதி தற்போது புது டெல்லியில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது, மேலும் இங்கு வர வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் இணையதளங்களில் வெளிநாட்டவருக்கும், உள்நாட்டினருக்கும் கிடைக்கின்றன, மேலும் இது ட்ரைபாட்வைசர், அட்லாசோப்ஸ்குரா, கூகுள் ஆர்ட்ஸ் மற்றும் கலாச்சாரம் மற்றும் பலவற்றின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


மேற்கோள்கள் தொகு

  1. Singh, Tanaya (2016-02-27). "Say Hello to India's First Open Air Public Art District. with 12 Stunning Pictures". The Better India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.
  2. Venkataraman, Janane (2019-04-27). "How Delhi’s Lodhi Colony became India’s first public art district" (in en-IN). https://www.thehindu.com/entertainment/art/art-al-fresco-in-delhis-lodhi-colony/article26952515.ece. 
  3. "Lodhi Art District". Google Arts & Culture (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.
  4. Lal, Niharika (26 April 2019). "Mural of the story: Lodhi Art District is a hit with tourists". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோதி_கலை_மாவட்டம்&oldid=3893427" இலிருந்து மீள்விக்கப்பட்டது