ழீன் புரோதீ

ழீன் பி. புரோதீ (Jean P. Brodie) ஒரு பிரித்தானிய வானியற்பியலாளர் ஆவார்.இவர் சாந்தா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியல், வானியற்பியல் துறையில் பேராசிரியராகவும் இலிக் நோக்கீட்டகத்தில் வானியலாளராகவும் உள்ளார்.[1][2]

ழீன் பி புரோதீ
Jean P. Brodie
துறைவானியற்பியல்
பணியிடங்கள்
கல்வி
விருதுகள்
  • குகன்யெய்ம் உறுப்பினர் (1990)

கல்வி

தொகு

இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டமும் கேம்பிரிட்ஜ் எம்மானுவேல் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலும் முனைவர் பட்டமும் பெற்றார்.[2]

இவருக்கு 1990 இல் வானியல், வானியற்பியலுக்குமான குகன்கீம் ஆய்வுநல்கை வழங்கப்பட்டது.[3] இவ பன்னாட்டு வானியல் ஒன்றிய உறுப்பினர் ஆவார்.[4]

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் கேம்பிரிட்ஜில் முனைபர் ஆய்வு முடித்ததும் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகதில் 1980 முதல் 1982 வரை முதுமுனைவர் ஆய்வைத் தொடர்ந்தார், பிறகு கேம்பிரிட்ஜ் கிர்ட்டன் கல்லுரியிலும் கேம்பிரித் வானியல் நிறுவனத்திலும் ஆய்வுறுப்பினராக 1982 முதல் 1984 வரை இருந்துள்ளார். பிறகு பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு மீண்டு உதவி ஆராய்ச்சி வானியலாளராக 1984 முதல்1987வரை பணிபுரிந்தாரிவர் 1987 இல் சாந்தா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் வானியலாளராகவும் இருந்துள்ளார். பிறகு அங்கே இணை பேராசிரியராகவும் வானியலாளராகவும் 1991 இலும் பேராசிரியராகவும் வானியலாளராகவும் 1997 இலும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.[1]

இவரது முதன்மை ஆராய்ச்சி ஆர்வங்கள் பால்வெளி உருவாக்கத்திலும் பேரியல் விண்மீன் கொத்துகளிலும் கவிந்துள்ளது.[1]

இவர் புறப் பால்வெளிகளின் பேரியல் கொத்துகளின் இயற்பியல் ஆய்வுக்கான பன்னாட்டு ஆராய்ச்சி வலையை நிறுவினார். இதன்வழி ஒன்றிணைந்த பால்வெளி, பேரியல் கொத்துகளின் அளக்கைத் திட்டத்தை உருவாக்கினார்.[5] இது SLUGGS அளக்கை எனும் குறும்பெயரால் அழைக்கப்பட்டது. இது UCSCயின் பெருமை மிக்க banana slug நினைவாகப் பெயரிடப்பட்டது.[1]

இவர் அபுள் மரபுத் திட்டத்தின் கூட்டுறுப்பினர் ஆவார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Jean P Brodie". Astronomy and Astrophysics. University of California, Santa Cruz. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  2. 2.0 2.1 "Professor Jean Brodie". UCO Lick. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  3. "Jean P. Brodie". John Simon Guggenheim Memorial Foundation. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  4. "Jean P. Brodie". International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  5. "The SLUGGS Survey". Swinburne University of Technology. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  6. "Collaborators". Hubble Heritage Project. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழீன்_புரோதீ&oldid=3952018" இலிருந்து மீள்விக்கப்பட்டது