ழ (சிற்றிதழ்)

தமிழ் சிற்றிதழ்

என்பது 1970களின் இறுதியில் வெளியான கவிதைகளுக்கான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். மாத இதழான இதன் ஆசிரியராக ஆத்மாநாம் இருந்தார்.[1]

ழ இதழ் 1978 ஆண்டிலிருந்து வெளிவந்தது. இதன் 24 ஆம் இதழ் 1983 சனவரியில் வெளி வந்தது. அதன்பிறகு சரிவர வெளியாகாத இது ஞானக்கூத்தனை ஆசிரியராக கொண்டு 1987இல் இருந்து மீண்டும் வெளிவரத் துவங்கியது. 1988இல் நின்று விட்டது.[2] ழ பொதுவாக கவிதையில் மிகுந்த அக்கறை காட்டியது. புதிதாக வெளிவந்த கவிதை நூல்கள் பற்றிய விரிவான விமர்சனங்களை வெளியிட்டது. நவீன ஓவியங்களை அட்டைப்படமாக வெளியிட்டது. ழ ஞானக்கூத்தன், ஆத்மாநாம் பிரம்ம்ராஜன், கலாப்ரியா, கல்யாண்ஜி காஸ்யபன், தேவதச்சன், ஆர். ராஜகோபாலன் முதலிய கவிஞர்களும், க. நா. சுப்ரமண்யம், நகுலன் போன்ற முன்னோடிகளும், மற்றும் பல புதியவர்களும் எழுதியிருக்கிறார்கள். பிறநாட்டுக் கவிஞர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்பும் வெளியானது.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 255–257. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
  2. ழ- சிற்றிதழ், தமிழ் விக்கி, பார்த்த நாள் 18 சூன் 2022
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழ_(சிற்றிதழ்)&oldid=3447534" இலிருந்து மீள்விக்கப்பட்டது