வகுப்பறைச் சூழல்
வகுப்பறைச் சூழல் (Classroom Climate) என்பது ஒரு வகுப்பறையின் சமூக, மனவெழுச்சி சார்ந்த மற்றும் இயற்சூழல் சார்ந்த சூழல் கூறுகளைக் குறிப்பதாகும். இது மாணவனின் வளர்ச்சி மற்றும் நடத்தையை பாதிக்கக்கூடிய ஆசிரியரின் தாக்கத்தைப் பற்றிய கருத்தியலாகும். மாணவனின் நடத்தையானது, ஒப்பார் குழுவினரின் இடைவினைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய நடத்தைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு கற்பிப்பவரையே சார்கிறது. கற்பிப்பவர் வகுப்பினைக் கையாளும் விதமானது, கற்றலுக்கு சாதகமற்ற சூழலை விடவும், நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். வகுப்பறையில் ஒரு ஆசிரியர் "கண்ணுக்கு தெரியாத கரமாக” இருக்க வேண்டும் என்று பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழக குழந்தை ஆய்வு மைய இயக்குநரும் மற்றும் உளவியல் பேராசிரியருமான முனைவர் காரென் எல்.பியர்மென் கருதுகிறார்.[1][2]
நேர்மறையான வகுப்பறைச் சூழலின் நோக்கம்
தொகுஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை அந்நியப்படுத்தாமல், அவர்களுக்கு வழிகாட்ட கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களின் நன்னலத்தின் பாதுகாப்பே, ஒப்பார் குழுவினர் மற்றும் ஆசிரியருடனான சமூக உறவுகளின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கல்வியானது, அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கியதாக மாற, மாற ஆசிரியர்கள் மாணவர்களின் குழுக்களை எப்படி ஒழுங்குபடுத்துவது, எப்படிப்பட்ட குழுக்களை அமைப்பது ஒரு சாதகமான சூழலுக்கு வழிவகுக்கும் போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வகுப்பறைகள் வகுப்பறை செயல்பாடுகள் சிறப்பாக அமைவதற்கான ஒரு முக்கிய கூறாக அமைகின்றன. மேலும், இது மேம்பட்ட இடைவினைகள் நிகழ்வதற்கும், சிறப்பான வளரறி மதிப்பீட்டற்கும் வழிவகுக்கிறது. சிறப்பு கல்வித் தேவைகள் உடைய மாணவர்கள் (SEN) வகுப்பறையில் மற்ற மாணவர்களிடம் இருந்து கூடுதலாக விலகியிருப்பதாக அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள்.[3]நடத்தை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் கற்றல் குறைபாடுகள்க உள்ள மாணவர்களும் சிறப்புத் தேவை கொண்ட மாணவர்களில் அடங்குவர். குறைபாடுகள் இல்லாத மாணவர்கள் அவர்களது கல்வி திறன்களில் உயர்ந்த நம்பிக்கை இருப்பதன் காரணமாக கற்றலில் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பங்கேற்கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், மாணவர்கள் வளரும் போது கல்வியானது வழக்கமாக செய்யக்கூடிய, அலுப்பைத் தரக்கூடிய ஒரு பணியை விடவும் குறைவாகவும், குழுவினராக இருந்து கற்கும் போது மகிழ்வைத் தரக்கூடிய அனுபவமாகவும் இருக்கும். குழப்பத்தை விளைவிக்கும் மாணவர்களின் செயல்கள் குறைய வழிவகுக்கும். மாணவர்கள் பாதிக்க பொருட்டு, ஒரு ஆசிரியர் மாணவர்களில் மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் மாணவர்கள் கண்காணித்து அவர்களை தகுந்த குழுவிற்கு மாற்ற வேண்டும். வகுப்பறையில் மிகக் குறைவான குழுக்களை உருவாக்குவதால், ஆசிரியரால் கற்பிப்பதற்கான வாய்ப்புகளை வகுக்கவும், தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு உதவவும் முடியும். மோசமான நடத்தைக்கு எதிராக போராடுவது ஒரு ஆசிரியரின் கடமையாகும்; வகுப்பறையை அமைப்பதிலும், நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்துவதோடு மாணவர்களின் பின்னணி, குடும்ப வாழ்க்கை, தரம், மற்றும் பிற சிக்கலான சிக்கல்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bierman, Karen L. (September–October 2011). "The promise and potential of studying the "invisible hand" of teacher influence on peer relations and student outcomes: A commentary". Journal of Applied Developmental Psychology. SI Teachers and Classroom Social Dynamics 32 (5): 297–303. doi:10.1016/j.appdev.2011.04.004. http://www.sciencedirect.com/science/article/pii/S0193397311000669. பார்த்த நாள்: 23 October 2013.
- ↑ "Classroom Climate". Center for Innovative Teaching and Learning. The Trustees of Indiana University. Archived from the original on 21 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 October 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Krull, Johanna; Wilbert, Jurgen; Hennemann, Thomas (2014). "The Social and Emotional Situation of First Graders with Classroom Behavior Problems and Classroom Learning Difficulties in Inclusive Classes". Learning Disabilities: A Contemporary Journal 12 (2).