வகுப்பினர் மறுகூடல்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பு உறுப்பினர்களால் அவர்களின் முன்னாள் உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரியில் அல்லது அதற்கு அருகில் சந்திப்பதற்காக நடத்தப்படும் கூட்டமே வகுப்பினர் மறுகூடல் ஆகும்.[1] இது அவர்களின் பட்டப்படிப்பின் ஆண்டு நிறைவினை ஒட்டி திட்டமிடப்பட்டுள்ளது, எ.கா. ஒவ்வொரு 5 அல்லது 10 வருடங்களுக்கும் நடைபெறலாம். அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்படலாம். கலந்துகொள்பவர்கள் வழக்கமாக தங்கள் மாணவர் நாட்களை நினைவு கூர்வார்கள் மற்றும் அவர்கள் கடைசியாக சந்தித்ததிலிருந்து என்ன நடந்தது என்பதைப் பற்றி கூறுவார்கள்.
சில கூடல்களின் போது தாங்கள் பயின்ற கல்வி நிறுவனங்களுக்கு நினைவுப் பரிசு வழங்கலாம்.
திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் வகுப்பினர் மறுகூடல்
தொகுதிரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில், வகுப்பு மறுகூடல்கள் என்பது தனித்தனி கதாபாத்திரங்களுக்குள் வெட்கம், வெறுப்பு மற்றும் குற்ற உணர்வு போன்ற உணர்ச்சிகளின் வெடிப்பைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.