வங்கனாசிக தீசன்
(வங்கநாசிக திச்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் என அறியப்பட்டவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். இவன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது.[1] ஆனாலும், இவனது ஆட்சிக்காலம் கிபி 106-109 என்றும்,[2] கிபி 110-113 என்றும்,[3][4] பலவாறாகக் கூறப்படுகிறது. இவனது தந்தையான வசபன் என்பவனின் இறப்புக்குப் பின்னர் இவன் அநுராதபுரத்தின் ஆட்சியில் அமர்ந்தான்.
வங்கனாசிக தீசன் | |
---|---|
அனுராதபுரக் கால அரசர் | |
ஆட்சி | 111–113 கி.பி |
முன்னிருந்தவர் | வசபன் |
முதலாம் கஜபாகு |
வங்கனாசிக தீசன் தனது மூன்றாண்டு கால ஆட்சிக்குப் பின்னர் இறந்தபோது கஜபாகுக்க காமினி அல்லது முதலாம் கஜபாகு எனப் பொதுவாக அறியப்பட்ட அவனது மகன் அனுராதபுரத்தின் அரியணையில் அமர்ந்தான்.
குறிப்புகள்
தொகு- ↑ Wijesinha, L. C. (translator), Mahavansa Part I, Asian Educational Services, New Delhi, 1996. p. 142.
- ↑ The Mahavamsa, Kings of Sri Lanka 131AD to 238AD
- ↑ Sri Lanka Genealogy Website – HISTORY, Kings & Rulers of Sri Lanka
- ↑ LIST OF THE SOVEREIGNS OF LANKA